Know the word ADROITNESS...

Word of the day is ADROITNESS...
Function
The word ADROITNESS is a noun.

Meaning
the quality of being skilful and quick in thinking or movement அதாவது சிந்தனையில் அல்லது செயலில் விரைவாகவும் திறமையாகவும் இருத்தல் என்று அர்த்தம்.

பொதுவாக ஒருவரது எண்ணமும் செயலும் ஒருமித்து செயல்படும் பொழுது அவரால் தான் செய்யும் செயல்களை திறமையாகவும் விரைவாகவும் செய்ய முடியும்.

எடுத்துக்காட்டாக ஒருவரால் மிகவும் வேகமாக தனது வாகனத்தை இயக்கி பல வாகனங்களை ஒரு நெரிசலான சாலையில் எந்தவித ஆபத்துமின்றி கடந்து போக முடிகிறது என்றால் அவரது சிந்தனை மற்றும் செயல் திறமையாகவும் விரைவாகவும் இருக்கிறது என்று அர்த்தம்.

அதை போன்றே ஒருவரால் TYPEWRITING உதவி கொண்டு எந்தவித பிழையுமின்றி விரைவாக எழுத முடிகிறது என்றால் அவரது சிந்தனை மற்றும் செயல் திறமையாகவும் விரைவாகவும் இருக்கிறது என்று அர்த்தம்.

இவ்வாறாக ஒருவரது சிந்தனை அல்லது செயல் திறமையாகவும் விரைவாகவும் இருக்கும் பொழுது அதனை தமிழில் சாமர்த்தியம் என்று அழைக்கிறோம்.

தமிழில் சாமர்த்தியம் என்ற அர்த்தத்தில் இந்த ADROITNESS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The opposition party is unable to topple him because he has political adroitness.
அவருக்கு அரசியல் சாமர்த்தியம் இருப்பதால் எதிர்க்கட்சியால் அவரை கவிழ்த்த முடியவில்லை.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் சாமர்த்தியம் என்ற இடத்தில் இந்த ADROITNESS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...