Know the word ANXIOUS...

Word of the day is ANXIOUS...
Pronunciation
/ˈæŋk.ʃəs/

Function
The word ANXIOUS is an adjective.

Meaning
ANXIOUS என்ற இந்த வார்த்தையை இரண்டு விதமாக பயன்படுத்தலாம்.

முதலாவதாக it means worried and nervous என்ற சொல்லலாம் அதாவது கவலையுடனும் பதட்டத்துடனும் கூடிய என்று அர்த்தம்.

இரண்டாவதாக it means very eager என்று சொல்லலாம் அதாவது அதிக ஆவலுடன் கூடிய என்று அர்த்தம்.

அதாவது பதட்டத்துடன் ஒரு விஷயத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு இடத்தில் இதனை கவலையுடனும் பதட்டத்துடனும் கூடிய என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

அதேநேரத்தில் ஆவலுடன் ஒரு விஷயத்திற்காக  எதிர்பார்த்து காத்திருக்கும் இடத்தில் இதனை ஆவலுடன் கூடிய எந்த அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக மாலைப் பொழுதே வீட்டிற்கு வர வேண்டிய மகனோ மகளோ இரவு நேரமாகியும் வீட்டிற்குவராத பொழுது அங்கு பெற்றோருக்கு ஏற்படுகின்ற அந்தப் பதட்டத்தையும் கவலையையும் குறிக்கும் இடத்தில் பதட்டத்துடனும் கவலையுடனும் கூடிய என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

அதே நேரத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தனது மகனோ அல்லது மகளோ பல வருடங்களுக்குப் பிறகு வீட்டிற்கு வரும் பொழுது அவரை வரவேற்க ஆவலுடன்  காத்திருக்கும் அந்த பெற்றோரின் உணர்வை வெளிப்படுத்தும் பொழுது இதனை ஆவலுடன் கூடிய என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

அதே போல சரியாக எழுதாத தேர்வின் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவனின் தேர்வின் முடிவு கண்டிப்பாக மிகப்பெரிய தோல்வியாக தான் இருக்கும் எனுமிடத்தில் பதட்டத்துடனும் கவலையுடனும் கூடிய என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

அதே நேரத்தில் கண்டிப்பாக முதல் மதிப்பெண் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று எதிர்பார்த்து காத்திருக்கிற ஒரு மாணவனின் உணர்வை வெளிப்படுத்தும் இடத்தில் இந்த ANXIOUS என்ற இந்த வார்த்தையை ஆவலுடன் கூடிய என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

In a sentence
He was anxious about his final exams.
அவன் தனது முழுஆண்டுத் தேர்வுகளைப் குறித்து பதட்டமாக இருந்தான்.

He was anxious to meet his girlfriend.
அவன் தனது காதலியை சந்திக்க ஆவலாக இருந்தான்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த ANXIOUS என்ற இந்த இந்த வார்த்தையை பதட்டத்துடன் கூடிய மற்றும் ஆவலுடன் கூடிய என்ற அர்த்தங்களில் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...