ACROSS, ALONG & THROUGH...
நண்பர்களே! இந்தப் பதிவிலே நாம் ACROSS, ALONG மற்றும் THROUGH என்ற preposition - ஐ எவ்வாறு பயன்படுத்துவது, அதற்கான அர்த்தம் என்ன, குழப்பம் இல்லாமல் எவ்வாறு இந்த மூன்று preposition - யையும் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுது என்ற அர்த்தத்தில் இந்த மூன்று preposition - ஐயும் பயன்படுத்தலாம். ஆனால் ஒவ்வொன்றையும் பயன்படுத்தும் பொழுதும் கவனமாகவும் அதற்கான இடத்திலும் பயன்படுத்த வேண்டும் அதைப் பற்றி பார்ப்போம்.
1 . ACROSS ( கடந்து செல்லுதல்)
2 . ALONG ( வழியாக )
3 . THROUGH (ஊடாக)
எடுத்துக்காட்டுகளுடன் ஒவ்வொரு preposition - ஐ பற்றியும் பார்க்கும் பொழுது நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
சில எடுத்துக்காட்டுகள் :
1 . ACROSS ( கடந்து செல்லுதல்)
ஆறு, ரோடு போன்றவற்றைக் கடந்து செல்லும் பொழுது நாம் ACROSS என்ற preposition - ஐ பயன்படுத்த வேண்டும். ஆற்றை கடந்து செல்லுதல், ரோட்டை கடந்து செல்லுதல் என்கின்ற அர்த்தத்தில் நாம் பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டு : 1
We went across the river by boat என்று சொல்லலாம் அதாவது படகு மூலமாக நாங்கள் ஆற்றின் மறுபக்கம் சென்றோம் என்று அர்த்தம்.
மேற்கூறிய எடுத்துக்காட்டில் ஆற்றை கடந்து செல்லுதல் என்கின்ற அர்த்தத்தில் நாம் ACROSS என்ற preposition - ஐ பயன்படுத்தியுள்ளோம்.
2 . ALONG (வழியாக)
ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுது நாம் இந்த ALONG என்ற preposition பயன்படுத்தலாம். குறிப்பாக, இரண்டு பக்கங்களிலும் அடைக்கப்பட்டிருக்கும் பொழுது. உதாரணமாக சாலை (road)
எடுத்துக்காட்டு : 1
You should drive along this road to reach Chennai என்று சொல்லலாம் அதாவது நீங்கள் சென்னையை அடைய இந்த சாலை வழியாக செல்ல வேண்டும் என்று அர்த்தம்.
3 . THROUGH (ஊடாக)
ஊடாக என்கின்ற அர்த்தத்தில் நாம் பயன்படுத்துவோம். குறிப்பாக மூன்று பக்கங்களிலும் அடைக்கப்பட்டிருக்கும் பொழுது குறிப்பாக அடர்ந்த காடு, சுரங்கம் போன்றவற்றை கடந்து செல்லும் பொழுது பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டு : 1
I have to go through the forest to reach my home என்று சொல்லலாம் அதாவது எனது வீட்டை அடைய நான் காட்டின் ஊடாக செல்ல வேண்டும் என்று அர்த்தம்.
மேற்கண்ட விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுகளின் மூலம் ACROSS , ALONG மற்றும் THROUGH என்ற preposition - ஐ குழப்பம் இல்லாமல் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் அவற்றிற்கு இடையான வித்தியாசத்தையும் தெளிவாக கற்றோம்.
தொடர்ந்து ஒவ்வொரு Preposition பற்றியும் பார்ப்போம்...
கருத்துகள்
கருத்துரையிடுக