Know the word RESEMBLE...

Word of the day is RESEMBLE...
Function
The word RESEMBLE is a verb.

Meaning
to look like or be like someone or something அதாவது யாரையாவது ஒருவரை அல்லது எதையாவது ஒன்றை போலவே இருத்தல் அல்லது தோற்றமளித்தல் என்று அர்த்தம்.

அதாவது ஒருவரது தோற்றத்தைப் பார்க்கும் பொழுதோ அல்லது அவரது செயல்களை பார்க்கும் பொழுதோ அவர் மற்றொருவரை நமக்கு நினைவுக்கு கொண்டு வந்தார் என்றால் அந்த இடத்தில் இந்த RESEMBLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

பொதுவாக ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அனேக நேரங்களில் ஒத்த தோற்றங்களை கொண்டவர்களாக இருப்பார்கள் அல்லது ஒரே மாதிரி சிரிக்க கூடியவர்களாக இருப்பார்கள் அல்லது ஒரே மாதிரியே செயல்களை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள்.

இவ்வாறாக ஒருவரைப் போன்றே மற்றொருவர் ஒத்த தோற்றம் கொண்டவர்களாகவோ அல்லது சிரிக்க கூடியவர்களாகவோ அல்லது செயல்களை செய்யக் கூடியவர்களாகவோ இருக்குமிடத்தில் இந்த RESEMBLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

தமிழில் தோற்றமளித்தல் அல்லது ஒத்திருத்தல் என்ற அர்த்தங்களில் இந்த RESEMBLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
He resembles his father very much.
அவர் அவரது தந்தையை மிகவும் ஒத்திருக்கிறார்.

This handwriting resembles my handwriting but this not mine.
இந்த கையெழுத்து எனது கையெழுத்தை ஒத்திருக்கிறது ஆனால் இது என்னுடையது அல்ல.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் தோற்றமளித்தல் அல்லது ஒத்திருத்தல் என்ற அர்த்தத்தில் இந்த RESEMBLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...