Know the word HECTIC...
Word of the day is HECTIC...
The word HECTIC is an adjective.
Pronunciation
/ˈhek·tɪk/
Meaning
busy, fast, and full of activity அதாவது நிறைய வேலைகளை ஓய்வில்லாமலும் வேகமாகவும் செய்ய வேண்டிய என்று அர்த்தம்.
அதாவது ஐந்து நாட்களில் செய்ய வேண்டிய வேலையை ஒரே நாளில் செய்து முடிக்கப்பட வேண்டிய ஒரு சூழ்நிலை வரும்போது அந்த நாளை HECTIC DAY என்று அழைக்கலாம்.
இவ்வாறாக தொடர்ந்து அந்த வாரம் முழுவதும் வேலை இருந்ததால் அதனை HECTIC WEEK என்று அழைக்கலாம்.
வருடம் முழுவதுமே வேலை இப்படிதான் இருக்கும் என்றால் அந்த வேலையை HECTIC JOB என்று அழைக்கலாம்.
மொத்தத்தில் வேலை செய்யும் இடத்தில் நிம்மதியாக கொஞ்ச நேரம் கூட ஓய்வாக இருக்க முடியாத ஒரு சூழ்நிலையை HECTIC என்ற இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம்.
தமிழில் ஓய்வே இல்லாத பரபரப்பான என்ற அர்த்தத்தில் இந்த HECTIC என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
Nobody will like a hectic job.
ஓய்வே இல்லாத பரபரப்பான ஒரு வேலையை யாரும் விரும்ப மாட்டார்கள்.
Practice it
எனவே நண்பர்களே! ஓய்வே இல்லாத பரபரப்பான என்ற அர்த்தத்தில் இந்த HECTIC என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக