Know the word FEASIBILITY...

Word of the day is FEASIBILITY...
Pronunciation
/ˌfiː.zəˈbɪl.ə.t̬i/

Function
The word FEASIBILITY is a noun.

Meaning
The word feasibility refers to the possibility of something that can be done என்று சொல்லலாம் அதாவது ஏதாவதொன்று செய்யக்கூடியதற்கான சாத்தியம் என்று அர்த்தம்.

அதாவது இந்த FEASIBILITY என்ற இந்த வார்த்தையானது ஒரு செயலை செய்வதற்கான அல்லது ஒரு குறிக்கோளை அடைவதற்கான சாத்தியத்தை ஆராய்கிற இடத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த FEASIBILITY என்ற இந்த வார்த்தையை பெரிய அளவிலும் பயன்படுத்தலாம் சிறிய அளவிலும் பயன்படுத்தலாம்.

பெரிய அளவிலும் பயன்படுத்தலாம் எனும் பொழுது எடுத்துக்காட்டாக ஒரு கார் நிறுவனமானது தனது தொழிற்சாலையை புதிதாக ஒரு இடத்தில் ஆரம்பித்து நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்கிற இடத்தில் பயன்படுத்தலாம்.

சிறிய அளவில் பயன்படுத்தலாம் எனும் பொழுது எடுத்துக்காட்டாக ஒருவர் தனது வீட்டை தனது இரண்டு விடுமுறை நாட்களில் புதிய வண்ணம் தீட்டி வீட்டை புதிதாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்கிற இடத்தில் பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் சாத்தியம் அல்லது சாத்திய கூறுகள் என்னும் அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும் ஆனால் அதே நேரத்தில் சாத்தியக்கூறுகளை ஆராய்தல் அப்படிங்கிற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும். 

In a sentence
The government is looking at the feasibility for smart classes in the government schools. 
அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளுக்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராய்ந்து வருகிறது.

The management is looking at the feasibility of constructing a swimming pool.
நீச்சல் குளம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது.

Practice it
எனவே நண்பர்களே! இந்த FEASIBILITY என்ற இந்த வார்த்தையை தமிழில் சாத்தியம் அல்லது சாத்திய கூறுகள் என்ற அர்த்தத்தில்  பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...