Know the word INCOMPATIBLE...

Word of the day is INCOMPATIBLE...
Pronunciation
/ˌɪn.kəmˈpæt.ə.bəl/

Function
The word INCOMPATIBLE is an adjective.

Meaning
The word INCOMPATIBLE not able to exist or work with another person or thing because of basic differences என்று சொல்லலாம் அதாவது அடிப்படை வேறுபாடுகள் காரணமாக மற்றொரு நபருடனோ அல்லது பொருளுடனோ இருக்கவோ அல்லது வேலை செய்யவோ முடியாத என்று அர்த்தம்.

அதாவது ஒரு மனிதன் மற்றொரு மனிதனுடனோ அல்லது ஒரு பொருள் மற்றொரு பொருளடனோ இணைந்து பயணிக்க இயலவில்லை அல்லது இணைந்து இருக்க இயலவில்லை அல்லது சேர்ந்து ஒரு செயலை செய்ய இயலவில்லை என்று வரும்பொழுது அந்த இடத்திலே இந்த INCOMPATIBLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

ஒரு சுயநலவாதியும் ஒரு பொதுநலவாதியும் இணைந்து நாட்டிற்கான நலத்திட்டங்களை செய்ய முடியுமா? என்று ஒரு கேள்வி எழும் பொழுது அதற்கான பதில் இல்லை என்று தான் அனுபவத்தில் சிறந்தவர்கள் சொல்வதற்கான வாய்ப்பிருக்கிறது.

அதுபோலவே ஒரு மைக்ரோ USB சார்ஜரைக் கொண்டு பேட்டரிக்கு சார்ஜ் ஏற்ற வேண்டிய ஒரு மொபைலை C Type சார்ஜரைக் கொண்டு சார்ஜ் ஏற்றுவது என்பது நடக்காத ஒரு காரியம்.

இவ்வாறாக ஒரு நபரோ அல்லது ஒரு பொருளோ மற்றொரு நபருடன் அல்லது மற்றொரு பொருளுடன் பொருந்தாமல் போகும் பொழுது அந்த இடத்திலே இந்த INCOMPATIBLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

எனவே தமிழில் பொருந்தாத அல்லது ஒவ்வாத அல்லது ஒத்துப்போகாத என்னும் அர்த்தத்தில் இந்த INCOMPATIBLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். 

In a sentence
C Type charger is incompatible with this mobile.
C Type சார்ஜர் இந்த மொபைலுக்கு பொருந்தாது.

They can't work together because they are compatible.
அவர்களால் இணைந்து செயல்பட 
முடியாது ஏனென்றால் அவர்கள் ஒருவர் மற்றொருவருடன்  ஒத்துப்போகாதவர்கள்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த INCOMPATIBLE என்ற இந்த வார்த்தையை தமிழில் பொருந்தாத அல்லது ஒவ்வாத அல்லது ஒத்துப்போகாத என்ற அர்த்தங்களில்  பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...