Know the word PONDER...

Word of the day is PONDER...
Pronunciation
/ˈpɒn.dər/

Function
The word PONDER is a verb.

Meaning
It means to think deeply on a subject என்று சொல்லலாம் அதாவது ஒரு விஷயத்தை ஆழமாக சிந்தித்தல்  என்று அர்த்தம்.

அதாவது ஏதாவதொரு முக்கியமான விஷயத்தை குறித்து ஒரு முடிவை எடுக்கும் பொழுது அந்த முடிவை எடுப்பதற்கு முன்பு அதற்கென ஒரு குறிப்பிட்ட நேரம் செலவு செய்து, அந்த விஷயத்தை சார்ந்த கருத்துக்களை மிகவும் ஆழமாக சிந்தித்து, அந்த முடிவை மிகவும் கவனமாக தேர்வு செய்யும் இடத்தில் இந்த PONDER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

பொறுமை கடலினும் பெரிது என்ற பழமொழிக்கு ஒரு முக்கியமான முடிவு எடுக்கும் பொழுது அதற்கென ஒரு நேரம் செலவு செய்து ஆழமாக சிந்தித்து அந்த முடிவை எடுக்கும் பொழுது அந்த முடிவானது மிகவும் தரமானதாகவும் மிகவும் சிறந்ததாகவும் இருக்கும் என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை.

எனவே தமிழில் இந்த PONDER என்ற இந்த வார்த்தையை ஆழ்ந்து சிந்தித்தல் அல்லது ஆழ்ந்து யோசித்தல் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

In a sentence
She spent a lot of time to ponder the issue.
அவள் பிரச்சினையைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க நிறைய நேரம் செலவிட்டாள்.

He usually ponders for a while before telling anything.
அவர் வழக்கமாகவே எதையாவது சொல்வதற்கு முன்பு சிறிது நேரம் ஆழ்ந்து சிந்திப்பார்.

Practice it
எனவே நண்பர்களே! ஆழ்ந்து சிந்தித்தல் அல்லது ஆழ்ந்து யோசித்தல் அப்படிங்ற இடத்தில இந்த PONDER ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...