Know the word PREDECESSOR...
Word of the day is PREDECESSOR...
/ˈpred.ə.ses.ɚ/
Function
The word PREDECESSOR is a noun.
Meaning
It refers to a person who held a job or office before the current holder என்று சொல்லலாம் அதாவது ஒரு வேலையை அல்லது ஒரு பதவியை தற்போது வைத்திருப்பவருக்கு முன் வைத்திருந்த நபர் என்று அர்த்தம்.
அதாவது நீங்க ஒரு இடத்துல வேலை செய்து கொண்டு இருக்கின்றீர்கள் என்றால் அந்த இடத்துல அந்த வேலையை உங்களுக்கு முன்பாக யாரொருவர் செய்து கொண்டு இருந்தாரோ அவர்தான் உங்களுக்கு PREDECESSOR.
மேலும் இந்த PREDECESSOR என்ற இந்த வார்த்தையை ஒரு மனிதனை குறிப்பதற்கு மட்டும் பயன்படுத்தாமல் ஒரு பொருளை குறிப்பதற்கும் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக ஒரு செல்போன் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய செல்போனை அறிமுகப்படுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம் அவ்வாறாக அந்த செல்போன் நிறுவனமானது கடந்த வருடம் அறிமுகப்படுத்திய செல்போனானது இந்த வருடம் அறிமுகப்படுத்திய செல்போனின் PREDECESSOR ஆகும்.
எனவே தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் முன்னோடி, முந்தியவர், முந்தியது முன்பு பதவி வகித்தவர், முன்பிருந்தவர் போன்ற அர்த்தங்களில் PREDECESSOR என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
The iPhone 14 is much better in quality than its predecessor.
ஐபோன் 14 ஆனது அதற்கு முந்தையதை விட தரத்தில் மிகவும் சிறப்பாக உள்ளது.
People always compare and see the present one with its predecessor.
மக்கள் எப்பொழுதும் தற்போதைய ஒன்றை அதனது முன்னோடியுடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள்.
Practice it
எனவே நண்பர்களே! இந்த PREDECESSOR என்ற இந்த வார்த்தையை முன்னோடி, முந்தியவர், முந்தியது முன்பு பதவி வகித்தவர், முன்பிருந்தவர் என்ற அர்த்தங்களில் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக