Know the word SUCCESSOR...

Word of the day is SUCCESSOR...
Pronunciation
/səkˈses.ɚ/

Function
The word SUCCESSOR is a noun.

Meaning
It refers to a person who will hold a job or office after the current holder என்று சொல்லலாம் அதாவது ஒரு வேலையை அல்லது ஒரு பதவியை தற்போது வைத்திருப்பவருக்கு அடுத்ததாக வைத்திருக்க போகும் நபர் என்று அர்த்தம்.

அதாவது நீங்க ஒரு இடத்துல வேலை செய்து கொண்டு இருக்கின்றீர்கள் என்றால் அந்த இடத்துல அந்த வேலையை உங்களுக்கு பதிலாக உங்களுக்குப் பின்பு பணியமர்த்தப்படும் அந்த நபரை இந்த SUCCESSOR என்ற இந்த வார்த்தை குறிக்கிறது.

மேலும் இந்த SUCCESSOR என்ற இந்த வார்த்தையை ஒரு மனிதனை குறிப்பதற்கு மட்டும் பயன்படுத்தாமல் ஒரு பொருளை குறிப்பதற்கும் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு கார் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய காரை  அறிமுகப்படுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம் அவ்வாறாக அந்த கார் நிறுவனமானது அடுத்த வருடம் அறிமுகப்படுத்த போகும் காரானது இந்த வருடம் அறிமுகப்படுத்திய காரின் SUCCESSOR ஆகும்.

எனவே தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் பதிலாள், பிந்திய, பின்வரும், பின்பு பதவி வகிக்கிறவர்,  போன்ற அர்த்தங்களில் SUCCESSOR என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
I think his successor will have to face lot of challenges.
அவருக்கு பின்பு பதவி வகிக்கிறவர் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

The successor of this car will be much faster than this one.
இதற்கு பின்வரும் காரானது  இதை விட மிக வேகமாக இருக்கும்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த SUCCESSOR என்ற இந்த வார்த்தையை பதிலாள், பிந்திய, பின்வரும், பின்பு பதவி வகிக்கிறவர் என்ற அர்த்தங்களில் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...