Know the word DYSTOPIA...

Word of the day is DYSTOPIA...
Pronunciation
/dɪˈstoʊ.pi.ə/

Function
The word DYSTOPIA is a noun.

Meaning
It refers to a miserable, dysfunctional state or society that has a very poor standard of living என்று சொல்லலாம் அதாவது மிகவும் மோசமான வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட ஒரு பரிதாபகரமான அல்லது செயலிழந்த சமூகம் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த DYSTOPIA என்ற இந்த வார்த்தையானது அரசியல், சட்டம், சமூகம் என அனைத்துமே நேர்மையற்ற வழியில் ஒழுங்கற்ற முறையில் இயங்குகின்ற ஒரு கற்பனை உலகை குறிப்பதற்காக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

மிகவும் எளிதான முறையில் விளக்க வேண்டும் என்றால் கடந்த வகுப்பில் படித்த UTOPIA என்ற வார்த்தையினுடைய எதிர்ப்பதம் தான் இந்த DYSTOPIA என்ற இந்த வார்த்தை.

அதாவது நீங்கள் கற்பனையில் ஒரு உலகத்தை நினைத்துப் பார்த்தாலே அந்த உலகம் பயம் நிறைந்ததாக ஊழல் நிறைந்ததாக வாழத் தகுதியற்றதாக இருக்கும் பொழுது  DYSTOPIA என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் ஊழல் நிறைந்த உலகம் அல்லது வாழ தகுதியற்ற உலகம் அல்லது மகிழ்ச்சியற்ற உலகம் போன்ற அர்த்தங்களில் இந்த DYSTOPIA என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
Nobody will ever want to live in a world of Dystopia.
வாழ தகுதியற்ற ஒரு உலகில் யாரும் வாழ விரும்ப மாட்டார்கள்.

I feel like What happens in the world leads us into dystopia.
உலகில் நடப்பவை நம்மை ஒரு மகிழ்ச்சியற்ற உலகத்திற்குள் இட்டுச் செல்வது போல் நான் உணர்கிறேன்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் ஊழல் நிறைந்த உலகம் அல்லது வாழ தகுதியற்ற உலகம் அல்லது மகிழ்ச்சியற்ற உலகம் போன்ற அர்த்தங்களில் இந்த DYSTOPIA என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...