Know the word LANGUID...

Word of the day is LANGUID...
Pronunciation
/ˈlæŋ.ɡwɪd/

Function
The word LANGUID is an adjective.

Meaning
It means lacking spirit or liveliness என்று சொல்லலாம் அதாவது ஆவி இல்லாத அல்லது உயிர் இல்லாத என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த LANGUID என்ற இந்த வார்த்தையை ஒரு அருமையான வார்த்தை என்று சொல்லலாம். 

அதாவது இந்த LANGUID என்ற இந்த வார்த்தையை ஒரு செயலை ரசிக்கக்கூடிய ஒரு இடத்திலும் பயன்படுத்தலாம் அதே போலவே ஒரு செயல் எரிச்சல் தரக்கூடிய ஒரு இடத்திலும் பயன்படுத்தலாம்.

அதாவது ரசிக்கக்கூடிய ஒரு இடத்தில் பயன்படுத்தலாம் எனும் பொழுது மெல்ல வீசும் தென்றல் காற்றை குறிப்பதற்கு பயன்படுத்தலாம் அதைப்போலவே மெல்ல ஓடும் நதியை குறிப்பதற்கும் பயன்படுத்தலாம்.

அதே நேரத்தில் எரிச்சல் தரக்கூடிய இடத்தில் பயன்படுத்தலாம் எனும்போது நோய்வாய்ப்பட்டதால் உடல் தளர்வுற்று மெல்ல மெல்ல தனது செயலை செய்யும் ஒரு மனிதனை குறிப்பதற்கும் பயன்படுத்தலாம்.

மேலும் பங்குச்சந்தையின் புள்ளிகள் மெல்ல மெல்ல மேலே உயர்கிற இடத்திலும் பயன்படுத்தலாம், அதைப்போலவே மெல்ல மெல்ல கீழே இறங்குகிற இடத்திலும் பயன்படுத்தலாம்.

இவ்வாறாக ஒரு செயல் மெல்ல நடைபெறுகிற இடத்தில் இந்த LANGUID என்று இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் மெல்ல என்கிற அர்த்தத்திலும் பயன்படுத்தலாம் அதே நேரத்தில் சோர்வுற்ற, தளர்ச்சியான, ஊக்கமிழந்த, களைப்பான போன்ற அர்த்தங்களிலும் இந்த LANGUID என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The languid wind made me to sleep in the park.
மெல்ல வீசிய காற்று என்னை பூங்காவில் தூங்க வைத்தது.

After the operation he feels languid and weak.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்கிறார்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் மெல்ல அல்லது சோர்வுற்ற, தளர்ச்சியான, ஊக்கமிழந்த, களைப்பான போன்ற அர்த்தங்களில் இந்த LANGUID என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...