Know the word PANDEMONIUM...
Word of the day is PANDEMONIUM...
Pronunciation
/ˌpæn.dəˈmoʊ.ni.əm/
Function
The word PANDEMONIUM is a noun.
Meaning
It refers to a state of extreme confusion and disorder என்று சொல்லலாம் அதாவது உச்சகட்ட குழப்பமும் சீர்குலைவும் நிறைந்த ஒரு நிலை என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! இந்த PANDEMONIUM என்ற இந்த வார்த்தையை அதிகப்படியான குழப்பமும் கூச்சலும் சீர்குலைவும் நிறைந்து இருக்கின்ற ஒரு சூழ்நிலையை குறிப்பதற்கு ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டாக ஒரு கால்பந்தாட்ட போட்டியில் அல்லது ஏதாவது ஒரு விளையாட்டு போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த இரு வீரர்களுக்கிடையே ஏற்படுகின்ற பிரச்சனை சிறிது பெரிதாகி எல்லா வீரர்களும் ஒருவரை ஒருவர் தாக்க ஆரம்பித்து அது விளையாட்டை பார்க்க வந்த பார்வையாளர்கள் மத்தியிலும் பெரும் பிரச்சனையாக உருவாகி அந்த விளையாட்டு மைதானம் முழுவதுமே ஒரு மிகப்பெரிய கலவர பூமியாக மாறி அதிகப்படியான கூச்சலும் குழப்பமும் சீர்குலைவும் ஏற்பட்டிருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த PANDEMONIUM என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
இந்தப் PANDEMONIUM என்ற இந்த வார்த்தையின் நடுவில் DEMON என்ற ஒரு வார்த்தை இருக்கிறது பாருங்கள் அதுதான் இந்த வார்த்தையினுடைய அடிப்படை என்று சொல்லிவிடலாம். அதாவது ஒரு மனிதன் தனது மனித நிலையை கடந்து பேய்த்தனமாக நடந்து கொள்ளும் நிலையில் இந்த PANDEMONIUM என்று இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எனவே தமிழில் பெருங்கூச்சல் அல்லது பெருங்குழப்பம் அல்லது பெரும் கூச்சலும் குழப்பமும் என்கிற அர்த்தத்தில் இந்த PANDEMONIUM என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
As the opposition party questioned the ruling party, pandemonium broke out in the parliament.
ஆளுங்கட்சியிடம் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியதும், நாடாளுமன்றத்தில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
Amidst all the pandemonium he kept quiet and concentrated on his job.
எல்லா பெருங்குழப்பத்திற்க்கு மத்தியிலும் அவன் அமைதியாக இருந்து அவனது வேலையில் கவனம் செலுத்தினான்.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் பெருங்கூச்சல் அல்லது பெருங்குழப்பம் அல்லது பெரும் கூச்சலும் குழப்பமும் என்கிற அர்த்தத்தில் இந்த PANDEMONIUM என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக