Know the word EMBELLISH...
Word of the day is EMBELLISH...
/ɪmˈbel.ɪʃ/
Function
The word EMBELLISH is a verb.
Meaning
It means to make something more attractive or beautiful என்று சொல்லலாம் அதாவது ஏதாவது ஒன்றை கவர்ச்சிகரமாகவோ அல்லது அழகாகவோ உருவாக்குதல் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! EMBELLISH என்ற இந்த வார்த்தையானது ஒரு விஷயத்தை வண்ணம் தீட்டியோ அல்லது கலை ஆபரணங்கள் சேர்த்தோ அல்லது கலை நயம் சேர்த்தோ கவர்ச்சிகரமாகவோ அல்லது அழகாகவோ உருவாக்குகிற இடத்தில் பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை என்று சொல்லலாம்.
எடுத்துக்காட்டாக ஒரு இடத்தில் பலூன் கட்டி, கொடித்தால் கட்டி, வண்ணங்கள் தீட்டி அழகுபடுத்தும் இடத்தில் இந்த EMBELLISH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
அதைப்போலவே ஒருவர் எழுதிய கதைக்கு இன்னும் சில கவர்ச்சிகரமான வார்த்தைகளை சேர்த்து, நகைச்சுவை பகுதிகளை சேர்த்து, இன்னும் பல புதிய வாக்கியங்களை இணைத்து அந்த கதையை மேலும் கவர்ச்சிகரமாக மாற்றுகிற இடத்திலும் இந்த EMBELLISH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
இவ்வாறாக ஒரு இடத்தையோ அல்லது ஒரு பொருளையோ அல்லது ஒரு பேச்சையோ அல்லது ஒரு கதையையோ அல்லது ஒரு கட்டுரையையோ இன்னும் அழகு படுத்துகிற இடத்தில் இந்த EMBELLISH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எனவே தமிழில் அலங்கரித்தல், அழகுபடுத்துதல், கவர்ச்சிபடுத்துதல் போன்ற அர்த்தங்களில் இந்த EMBELLISH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
The kids were embellished like an angel with two wings.
குழந்தைகள் இரண்டு இறக்கைகளுடன் ஒரு தேவதை போல அலங்கரிக்கப்பட்டனர்.
She was asked to embellish the story with some jokes.
சில நகைச்சுவைகள் சேர்த்து கதையை அழகுபடுத்தும்படி அவள் கேட்டுக்கொள்ளப்பட்டாள்.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் அலங்கரித்தல், அழகுபடுத்துதல், கவர்ச்சிபடுத்துதல் போன்ற அர்த்தங்களில் இந்த EMBELLISH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக