Know the word SIMPLETON...

Word of the day is SIMPLETON...
Pronunciation
/ˈsɪm.pəl.tən/

Function
The word SIMPLETON is a noun.

Meaning
It refers to a person without the usual ability to use reason and understand என்று சொல்லலாம் அதாவது பகுத்தறிவை பயன்படுத்தி ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளக்கூடிய வழக்கமான திறமை இல்லாத ஒரு மனிதர் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளக்கூடிய திறமை மற்றும் அதனை வாழ்க்கையில் செயல்படுத்தக்கூடிய திறமை என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது என்பது எல்லோரும் அறிந்ததே.

ஒரு வாழ்வியல் கருத்தை சொன்ன முதல் முறையே புரிந்து கொண்டு அதனை வாழ்க்கையில் செயல்படுத்தும் திறமை கொண்டவர்களை நாம் அறிவாளி புத்திசாலி என்று தமிழில் அழைப்போம்.

அதற்கு நேர் எதிராக ஒரு வாழ்வியல் கருத்தை எத்தனை முறை சொன்னாலும் புரிந்து கொள்ளக்கூடிய திறமை இல்லாதவர்களை, அப்படியே புரிந்து கொண்டாலும் அதனை வாழ்க்கையில் செயல்படுத்த தெரியாதவர்களை அல்லது செயல்படுத்தாதவர்களை அறிவு கெட்டவர், புத்தி இல்லாதவர், பொது அறிவு இல்லாதவர், முட்டாள் என்று நாம் தமிழில் அழைப்போம்.

இவ்வாறாக ஒரு மனிதனால் ஒரு வாழ்வியல் கருத்தை புரிந்து கொள்ளவே முடியாமல் போகும்பொழுது அல்லது புரிந்து கொண்ட ஒரு வாழ்வியல் கருத்தை வாழ்க்கையில் செயல்படுத்தாமல் போகும் பொழுது அந்த மனிதனை இந்த SIMPLETON என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்

எனவே தமிழில் அறிவு கெட்டவர், புத்தி இல்லாதவர், பொது அறிவு இல்லாதவர், முட்டாள் போன்ற அர்த்தங்களில் SIMPLETON என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
He is a simpleton.
அவன் ஒரு புத்தி இல்லாதவன்.

She tells me everything many times as if I am a simpleton.
நான் ஒரு முட்டாள் என நினைத்து அவள் எல்லாவற்றையும் என்னிடம் பலமுறை சொல்கிறாள்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் அறிவு கெட்டவர், புத்தி இல்லாதவர், பொது அறிவு இல்லாதவர், முட்டாள் போன்ற அர்த்தங்களில் SIMPLETON என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...