Know the word VAMOOSE...
Word of the day is VAMOOSE...
/vəˈmuːs/
Function
The word VAMOOSE is a verb.
Meaning
It means to go away or disappear suddenly என்று சொல்லலாம் அதாவது திடீரென்று மறைந்து போகுதல் அல்லது விலகிப் போகுதல் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! எல்லாருக்குமே எல்லா இடமுமே பிடிக்காது என்று சொல்லலாம் அதற்கு காரணம் அங்கே இருக்கும் ஆட்களாக இருக்கலாம் அல்லது அங்கே நடக்கும் செயல்களாக இருக்கலாம்.
இவ்வாறாக நமக்கு ஒரு இடம் பிடிக்காமல் போகும் பொழுது அந்த இடத்திற்கு போகாமல் இருக்க முயற்சி செய்வோம். அப்படியே அந்த இடத்திற்கு போகக்கூடிய ஒரு சூழ்நிலை வந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே வெளியே வருவதற்கு முயற்சி செய்வோம். அப்படித்தானே?
இவ்வாறாக ஒருவர் ஒரு இடத்திலிருந்து வேகமாகவோ அல்லது உடனடியாகவோ அல்லது யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவோ தப்பித்து ஓடிவிடும் பொழுது அந்த இடத்திலே இந்த VAMOOSE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
VAMOOSE என்ற இந்த வார்த்தையானது SPANISH லிருந்து ஆங்கிலத்திற்கு வந்த ஒரு வார்த்தையாகும் SPANISH ல் VAMOSE என்ற இந்த வார்த்தைக்கு LET'S GO அல்லது WE SHALL GO என்ற அர்த்தமாகும்.
எனவே தமிழில் தப்பித்துச் செல்லுதல், ஓடிவிடுதல், நழுவி விடுதல், அவசர அவசரமாக செல்லுதல் போன்ற அர்த்தங்களில் VAMOOSE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
On seeing his father he vamoosed from the cricket ground.
அவனது அப்பாவை பார்த்ததும் அவன் கிரிக்கெட் மைதானத்திலிருந்து ஓடிவிட்டான்.
As soon as her grandma started a story, she vamoosed from the place.
அவளுடைய பாட்டி கதையை ஆரம்பித்தவுடன், அவள் அந்த இடத்தை விட்டு நழுவிவிட்டாள்.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் தப்பித்துச் செல்லுதல், ஓடிவிடுதல், நழுவி விடுதல், அவசர அவசரமாக செல்லுதல் போன்ற அர்த்தங்களில் VAMOOSE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக