Know the word EPICURE...

Word of the day is EPICURE...
Pronunciation
/ˈep.ə.kjʊr/

Function
The word is a noun.

Meaning
It refers to a person who enjoys high quality food and drink என்று சொல்லலாம் அதாவது உயர்தர உணவு மற்றும் பானங்களை உண்ணும் ஒரு நபர் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! உண்பதிலும் குடிப்பதிலும் கை தேர்ந்த ஒருவரை இந்த EPICURE என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

அதாவது ஒருவர் தான் உண்ணும் உணவையும் குடிக்கும் பானத்தையும் ஏனோதானோ என்று தேர்வு செய்யாமல், மனதுக்குப் பிடித்ததாக, சுவை மிகுந்ததாக உயர்ந்த தரம் கொண்டதாக மிகவும் கவனத்துடனும் ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் தேர்வு செய்து உண்பவராகவும் குடிப்பவராகவும் இருக்கும் பொழுது அவரை இந்த EPICURE என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

மேலும் நண்பர்களே! ஒருவரை EPICURE என்று சொல்லும் பொழுது அவரை POSITIVE ஆன அர்த்தத்திலேயே சொல்கிறோம் என்றே பொருளாகும்.

எனவே தமிழில் உண்ணும் உணவையும் குடிக்கும் பானத்தையும் கவனத்துடன் தேர்வு செய்பவர் அல்லது உண்ணும் உணவையும் குடிக்கும் பானத்தையும் உயர்ந்த தரம் கொண்டதாக தேர்வு செய்பவர் அல்லது உண்ணும் உணவையும் குடிக்கும் பானத்தையும் மனதுக்குப் பிடித்ததாக தேர்வு செய்பவர் அல்லது உண்ணும் உணவையும் குடிக்கும் பானத்தையும் ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் தேர்வு செய்பவர் போன்ற அர்த்தங்களில் இந்த EPICURE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
If you are an epicure, you need lot of money.
நீங்கள் உண்ணும் உணவையும் குடிக்கும் பானத்தையும் உயர்ந்த தரம் கொண்டதாக தேர்வு செய்பவராக இருந்தால், உங்களுக்கு நிறைய பணம் தேவை.

If you want to enjoy a good meal, take an epicure with you.
நீங்கள் ஒரு நல்ல உணவை அனுபவிக்க விரும்பினால், உங்களுடன் உண்ணும் உணவையும் குடிக்கும் பானத்தையும் ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் தேர்வு செய்யும் ஒருவரை கூட்டிச் செல்லுங்கள்.

Practice it
எனவே நண்பர்களே! EPICURE என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...