Know the word MELLIFLUOUS...
Word of the day is MELLIFLUOUS...
Pronunciation
/melˈɪf.lu.əs/
Function
The word MELLIFLUOUS is an adjective.
Meaning
It means having a pleasant and soothing sound என்று சொல்லலாம் அதாவது இனிமையான மற்றும் ஆறுதலான ஒலியைக் கொண்டிருக்கின்ற என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! இந்த வார்த்தையானது MELLIFLUUS என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்த ஒரு வார்த்தையாகும். இதனுடைய அர்த்தம் என்னவென்றால் FLOWING WITH HONEY என்றாகும் அதாவது தேனாக பாய்கின்ற என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! நாம் தமிழில் சில நேரங்களில் பயன்படுத்துவோம் அதாவது ஒருவருடைய பேச்சோ அல்லது ஒரு இசையோ கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும் பொழுது மனதிற்கு ஆறுதல் தருவதாக இருக்கும் பொழுது அந்த பேச்சை அல்லது அந்த இசையை தேன் போல் காதில் பாய்கின்றது என்று சொல்வோம். அதே அர்த்தத்தில் இந்த MELLIFLUOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எனவே தமிழில் கனிவாக, மென்மையாக, இனிமையாக, ஆறுதலாக, தேன் போல் பாய்கின்ற, மென்மையாக போன்ற அர்த்தஙகளில் இந்த MELLIFLUOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
The music was so mellifluous that I had slept peacefully.
இசை மிகவும் இனிமையாக இருந்ததால், நான் அமைதியாக தூங்கி விட்டேன்.
Her mellifluous voice attracts me a lot.
அவளுடைய மென்மையான குரல் என்னை மிகவும் கவர்கின்றது.
Practice it
எனவே நண்பர்களே! MELLIFLUOUS என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக