Know the word PERUSAL...
Word of the day is PERUSAL.
/pəˈruː.zəl/
Function
The word PERUSAL is a noun.
Meaning
It refers to reading carefully with intent to remember என்று சொல்லலாம் அதாவது நினைவில் கொள்ளும் நோக்கத்துடன் கவனமாகப் படித்தல் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! ஒருவர் ஒரு புத்தகத்தை வாசிக்கும் பொழுது அதில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வரியையும் ரசித்து, ருசித்து, மனதில் நிற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாசிக்கும் பொழுது அந்த இடத்திலே PERUSAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
அதைப்போலவே கூர்ந்து ஆராய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு DOCUMENT ஐ மிகக் கவனமாக ஒரு வரி கூட விடாமல் வாசித்து ஆய்வு செய்யும் பொழுது அந்த இடத்திலேயும் PERUSAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எனவே தமிழில் கூர்ந்து வாசித்தல் அல்லது முழுமையாகப் வாசித்தல் அல்லது ஒரு வரி கூட விடாமல் வாசித்தல் அல்லது கூர்ந்து ஆராய்தல் போன்ற அர்த்தங்களில் PERUSAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
It is good to give the contract a thorough perusal before approving it
ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன், அதை முழுமையாகப் வாசிப்பது நல்லது
You must give a perusal of these books before appearing for the exam.
நீ பரீட்சைக்கு செல்வதற்கு முன் இந்தப் புத்தகங்களை கூர்ந்து வாசிக்க வேண்டும்.
Practice it
எனவே நண்பர்களே! PERUSAL என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....
கருத்துகள்
கருத்துரையிடுக