Know the word REBATE...
Word of the day is REBATE...
/ˈriː.beɪt/
Function
The word REBATE can be used as noun and verb.
Meaning
It refers to a reduction in the price of a product or service என்று சொல்லலாம் அதாவது தயாரிக்கப்பட்ட ஒரு பொருள் அல்லது வழங்கப்படும் சேவையின் விலையில் குறைப்பு என்று அர்த்தம்.
பொதுவாக நண்பர்களே! ஒரு உற்பத்தியாளரோ அல்லது ஒரு சில்லறை வியாபாரியோ தங்களிடம் புதிதாக தயாரிக்கப்பட்ட ஒரு பொருளை அல்லது உபரியாக இருக்கும் உபரி சரக்குகளை வாடிக்கையாளருக்கு விற்பதற்காக தள்ளுபடிகள் கொடுத்து அவற்றை விற்கும் பொழுது அந்த இடத்திலே REBATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
மொத்தத்தில் புதிதாக ஒரு பொருள் வாங்கும் பொழுது அந்த பொருளை விற்பனை செய்பவர் OFFER வழங்கும்பொழுது அல்லது CASH DISCOUNT வழங்கும்பொழுது அல்லது 10% CASH REFUND வழங்கும்பொழுது அல்லது CASH REFUND IN FUTURE PURCHASE என்று சொல்லும் பொழுது அதனை இந்த REBATE என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.
எனவே தமிழில் தள்ளுபடி என்ற அர்த்தத்தில் REBATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
It is always good to buy some big-ticket items when they give rebate.
தள்ளுபடி கொடுக்கும்போது விலையுயர்ந்த பொருட்களை வாங்குவது எப்பொழுதும் நல்லது.
The airline offered a rebate to customers who booked their flight-tickets in advance.
முன்கூட்டியே தங்கள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு விமான நிறுவனம் தள்ளுபடி வழங்கியது.
Practice it
எனவே நண்பர்களே! REBATE என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....
கருத்துகள்
கருத்துரையிடுக