NOWHERE NEAR & IN THE NEAR FUTURE...

ADVERBIAL PHRASES
கடந்த பதிவில் preposition NEAR பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் பார்த்தோம். அதை தொடர்ந்து இந்த NEAR என்ற preposition - ஐ பயன்படுத்தி இரண்டு phrasal verbs உள்ளது அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

1. NOWHERE NEAR
 
2. IN THE NEAR FUTURE  

கடந்த பதிவில் பயன்படுத்திய எடுத்துக்காட்டுகளையே இந்த பதிவிலும் பயன்படுத்தியுள்ளேன். காரணம் அதன் மூலம் NEAR என்ற preposition - கான அர்த்தத்தையும்,  இந்த இரண்டு phrasal verbs - கான அர்த்தத்தையும் மேலும் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தையும் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

மேற்கண்ட அனைத்தையும் பற்றி  விரிவாகவும், தெளிவாகவும் எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.

முதலாவதாக NOWHERE NEAR பற்றி பார்ப்போம்.

எடுத்துக்காட்டு : 1

I stand nowhere near my friend என்று சொல்லலாம் அதாவது நான் எனது நண்பனை விட  தொலைவில் இருக்கிறேன் என்று அர்த்தம்.

அதாவது அந்த தொலைவு என்பது தூரத்தை மட்டும் வைத்து குறிப்பிடவில்லை மாறாக குணத்தின் அடிப்படையில், அழகின் அடிப்படையில், கல்வியின் அடிப்படையில் தொலைவு என்று நாம் பல்வேறு வகையான அர்த்தங்களில் இந்த தொலைவு என்ற வார்த்தையை NOWHERE NEAR  என்ற phrasal verb மூலம் பயன்படுத்த முடியும்.

எடுத்துக்காட்டு : 2

He was standing nowhere near the school என்று சொல்லலாம் அதாவது அவர் பள்ளிக்கு தொலைவில் நின்று கொண்டிருந்தார் என்று அர்த்தம் அதாவது அவர் நின்ற இடத்திற்கும் பள்ளிக்கும் சம்பந்தமில்லை என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

His friend was nowhere near death என்று சொல்லலாம் அதாவது அவரது நண்பர் மரணத்திற்கு தொலைவில் இருந்தார் என்று அர்த்தம். அதாவது ஒருவர் சாவுக்கு அருகாமையில் இருந்தார் என்று சொல்லும் பொழுது அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லும் பொழுது இந்த வாக்கியத்தை பயனபடுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு : 4

Raja had reached home nowhere near 3 o'clock in the morning என்று சொல்லலாம் அதாவது ராஜா அதிகாலை 3 மணிக்கு தொலைவில் வீட்டிற்கு வந்திருந்தார் என்று அர்த்தம் அதாவது அவர் வந்த நேரத்திற்கும் 3 மணிக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லும் பொழுது இந்த வாக்கியத்தை பயனபடுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு : 5

He always says everything nowhere near the truth என்று சொல்லும் பொழுது அவர் எப்போதும் எல்லாவற்றையும் உண்மைக்கு தொலைவிலே கூறுவார் என்று அர்த்தம் அதாவது அவர் சொல்வதில் உண்மையே இல்லை என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 6

He got  nowhere near 100 marks என்று சொல்லலாம் அதாவது அவனது மதிப்பெண் 100க்கு தொலைவில் இருந்தது என்று அர்த்தம் அதாவது அவன் எடுத்த மதிப்பெண்ணிற்கும் 100 க்கும் சம்பந்தமே இல்லை என்று அர்த்தம்.


விளக்கம் :

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளின் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ,  இந்த NOWHERE NEAR  என்ற  phrasal verbs - ஐ நாம் எங்கே பயன்படுத்த வேண்டும் என்றால் ,

ஒருவர் ஒரு கருத்தை கூறும் பொழுது அதற்கு முற்றிலுமாக எதிர்ப்பதமான ஒன்றை கூறும் இடத்தில் பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக IN THE NEAR FUTURE என்ற phrase ஐ பற்றி பார்ப்போம்.

"இன்னும் கொஞ்ச காலத்தில்" என்ற அர்த்தத்தில் இதனை பயன்படுத்த வேண்டும் இதனை எப்பொழுதும் எதிர்காலத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு : 1

We will buy a car in the near future என்று சொல்லலாம் அதாவது இன்னும் கொஞ்ச காலத்தில் நாங்கள் ஒரு கார் வாங்குவோம் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

I will finish all my work in the near future என்று சொல்லலாம் அதாவது இன்னும் கொஞ்ச காலத்தில் நான் எனது வேலைகளை எல்லாம் முடிப்பேன் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

He will join a new job in the near future என்று சொல்லலாம் அதாவது இன்னும் கொஞ்ச காலத்தில் அவர் புதிய வேலையில் சேர்ந்திடுவார் என்று அர்த்தம்.

மேற்கண்ட விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுளின் மூலம்   NEAR என்ற preposition   - ஐ பயன்படுத்தி இரண்டு phrasal verbs

1. NOWHERE NEAR
 
2. IN THE NEAR FUTURE  

எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்   கற்றோம்.

தொடர்ந்து ஒவ்வொரு  Preposition பற்றியும் பார்ப்போம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...