It cleft in detail in Tamil...

Cleft sentence என்பது ஆங்கில இலக்கணத்தில் மிகவும் அருமையான ஒரு பகுதி...

Cleft என்பது cleave என்ற வார்த்தையில் இருந்து உருவாகிறது.

Cleave என்றால் split into two என்று அர்த்தம் அதாவது இரண்டு பகுதிகளாகப் பிரித்தல் என்று பொருள்.

இதன்படி ஒரு சாதாரண வாக்கியமானது இரண்டு பகுதிகளாக பிரித்து பேசப்படுகிறது. நாம் இதனை தமிழிலும் பயன்படுத்துகிறோம்.

நாம் தமிழில் பேசும் பொழுது எப்பொழுதுமே active voice ஐ பயன்படுத்தி பேசுவோம் எப்பொழுதாவது passive voice பயன்படுத்துவோம் ஆனால் ஆங்கிலத்தில் active voice மற்றும் passive voice சரிசமமாக பயன்படுத்தப்படுகிறது.

உதாரணமாக

ராஜா கதவைத்திறந்தான் என்று தமிழில் சொல்லும்பொழுது நாம் ராஜாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுகிறோம் ஆனால் அதே நேரத்தில் கதவிற்கு முக்கியத்துவம் கொடுத்து பேசும்போது கதவை ராஜா திறந்தான் என்று சொல்லிவிடுவோம். மேற்கூறிய இரண்டு எடுத்துக்காட்டுகளுமே active voice தான்.

ஆனால் ஆங்கிலத்தில் அவ்வாறு கிடையாது ராஜாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து பேசும்பொழுது Raja opened the door என்று active voice ல் சொல்வார்கள் அதேநேரத்தில் கதவிற்கு முக்கியத்துவம் கொடுத்து பேசும்பொழுது The door was opened by Raja என்று passive voiceல் பயன்படுத்துவார்கள்.

இந்த  active voice மற்றும் passive voice ஐ தவிர்த்து சில நேரங்களில் subject மற்றும் object ஐ மிகைப்படுத்தி பேச வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் அந்த நேரத்தில் நாம் cleft sentence ஐ பயன்படுத்துகிறோம். இதனை எவ்வாறு ஆங்கிலத்தில் அமைப்பது என்பதைப் பற்றி தெளிவாக படிப்போம்.

Sentence structure

Subject க்கு முக்கியத்துவம் கொடுத்து பேசும்பொழுது கீழ்காணும் வாக்கிய அமைப்பை பயன்படுத்தலாம்.

கீழ்காணும் வீடியோவை பார்த்துவிட்டு அதற்கு கீழே உள்ள விளக்கத்தை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக புரியும்...




It + be verb + Subject (o.s)  + Relative Pronoun + verb (o.s) + details (o.s).

Raja opened the door. (O.S)
It was Raja who opened the door.

The door was opened by Raja. (O.S)
It was the door that was opened by Raja.

Raja met Rani yesterday. (O.S)
It was Raja who met Rani yesterday.

Rani was met by Raja yesterday. (O.S)
It was Rani who was met by Raja yesterday.


Subject, object, place & time என வாக்கியத்தின் பல பகுதிகளுக்கு cleft sentence ஐ அமைக்க கீழ்காணும் வாக்கிய அமைப்பை பயன்படுத்தலாம்.

It + be verb + emphasis W/Ph (o.s)  + Relative Pronoun + remainder (o.s).

கீழ்காணும் வீடியோக்களை பார்த்துவிட்டு அதற்கு கீழே உள்ள விளக்கத்தை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக புரியும்...







Examples

I am in need of this table.
எனக்கு இந்த மேஜை தேவை.

It is I who am in need of this table.
எனக்குதான் இந்த மேஜை தேவை.

Apple is good for health.
ஆப்பிள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

It is apple that is good for health.
ஆப்பிள் தான் ஆரோக்கியத்திற்கு நல்லது.

They had a big car last year.
கடந்த ஆண்டு அவர்களிடம் ஒரு பெரிய கார் இருந்தது.

It was last year when they had a big car.
கடந்த ஆண்டுதான் அவர்களிடம் ஒரு பெரிய கார் இருந்தது.

It is a big car that they have.
அவர்களிடம்தான் ஒரு பெரிய கார் இருக்கிறது.


Continuous tense

We are meeting the students in the hall.
நாங்கள் மண்டபத்தில் மாணவர்களைச் சந்தித்து கொண்டிருக்கிறோம்.

It is we who are meeting the students in the hall.
நாங்கள்தான் மண்டபத்தில் மாணவர்களைச் சந்தித்து கொண்டிருக்கிறோம்.

We were meeting the students in the hall.
நாங்கள் மண்டபத்தில் மாணவர்களைச் சந்தித்து கொண்டிருந்தோம்.

It was we who were meeting the students in the hall.
நாங்கள் தான் மண்டபத்தில் மாணவர்களைச் சந்தித்து கொண்டிருந்தோம்.

We will be meeting the students in the hall.
நாங்கள் மண்டபத்தில் மாணவர்களைச் சந்தித்து கொண்டிருப்போம்.

It will be the students whom we will be meeting in the hall.
மாணவர்களைதான் நாங்கள் மண்டபத்தில் சந்தித்து கொண்டிருப்போம். 

Perfect tense

We have met the students in the hall.
நாங்கள் மாணவர்களை மண்டபத்தில் சந்தித்திருக்கிறோம்.

It is the students whom we have met in the hall. 
மாணவர்களைத்தான் நாங்கள்   மண்டபத்தில் சந்தித்திருக்கிறோம். 

We had met the students in the hall.
நாங்கள் மண்டபத்தில் மாணவர்களை சந்தித்திருந்தோம்.

It was in the hall where we had met the students.
மண்டபத்தில்தான் நாங்கள் மாணவர்களை சந்தித்திருந்தோம்.

We will have met the students by this time tomorrow.
நாளை இந்த நேரத்தில் நாங்கள் மாணவர்களை சந்தித்திருப்போம்.

It will be by this time tomorrow when we will have met the students.
நாளை இந்த நேரத்தில்தான் நாங்கள் மாணவர்களை சந்தித்திருப்போம்.

Perfect continuous

Rani has been working in this company since 2000.
ராணி 2000 முதல் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே இருகிறார்.

It is in this company where she has been working since 2000.
இந்த நிறுவனத்தில்தான் ராணி 2000 முதல் பணிபுரிந்து கொண்டே இருகிறார்.


Raja had been working there for 4 years.
ராஜா 4 ஆண்டுகளாக அங்கே வேலை செய்து கொண்டே இருந்தார்.

It was for 4 years when Raja had been working there.
 4 ஆண்டுகளாகதான் ராஜா அங்கே வேலை செய்து கொண்டே இருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...