Know the word FAVOUR...

Word of the day is FAVOUR...
Function
The word FAVOUR can be used as verb and noun.

Two Meanings
1) support or liking for someone or something அதாவது யாராவது ஒருவருக்கு அல்லது ஏதாவது ஒன்றிற்கு ஆதரவாக இருத்தல் அல்லது விருப்பம் தெரிவித்தல் என்று அர்த்தம்.

அதாவது நம்ம வீட்டிலேயோ அல்லது நம்ம வேலை செய்ற இடத்திலேயோ பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழே வேலை செய்யும் பணியாளர்களில் எல்லாரையும் விட ஒருவரை மட்டும் மிகவும் பிடித்திருக்கும் ஆதலால் அவருக்கு எல்லாவற்றிலும் முன்னுரிமை கொடுப்பார்கள் அதனைத்தான் சாதகமாக இருத்தல் என்று இந்த வார்த்தை சொல்கிறது.

இவ்வாறாக சாதகமாக இருத்தல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.

In a sentence
1) a) The manager always favours him in everything.
மேலாளர் எப்போதும் எல்லாவற்றிலும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்.

 b) The manager always does things in favour of him.
மேலாளர் எப்போதும் அவருக்கு ஆதரவாக எல்லாவற்றையும் செய்கிறார்.

Meaning
2)  an act of kindness or help அதாவது ஒரு கருணைச் செயல் அல்லது உதவி என்று அர்த்தம்.

Can you help me? என்ற இடத்திற்கு பதிலாக Can you do me a favour? இன்று பயன்படுத்தலாம் அதாவது எனக்கு உதவி செய்ய முடியுமா? என்று அர்த்தம்.

இவ்வாறாக உதவி என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.

In a sentence
I have come to ask you a favour.
உன்னிடம் ஒரு உதவி கேட்க வந்திருக்கிறேன்.

Practice it
மேற்கூறிய அர்த்தங்களில் இந்த FAVOUR ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...