Know the word ALLUSIVE...
Word of the day is ALLUSIVE...
The word ALLUSIVE is an adjective.
Two Meanings
1) characterized by indirect references அதாவது மறைமுக குறிப்புகளால் வகைப்படுத்தப்படுதல் என்று அர்த்தம்.
அதாவது ஒருவர் அவர் சொல்ல வருகின்ற கருத்தை அல்லது விஷயத்தை நேரடியான முறையில் சொல்லாமல் மறைமுகமாக சொல்லும்பொழுது இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம். பெரும்பாலும் கவிதைகள் மறைமுக கருத்துக்களை கொண்டதாக இருக்கிறது அதேபோன்று சிலரது கட்டுரைகளும் கதைகளும் மறைமுக கருத்துக்களை கொண்டதாக இருக்கும். நவீன காலத்தில் நடனங்கள் கூட மறைமுக கருத்துக்களைக் கொண்டதாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இவ்வாறாக மறைமுக கருத்துக்களோடு பேசுவது எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஒருவர் இவ்வாறாக மறைமுகமாக பேசுவது உங்களுக்கு பிடித்தது என்றால் சுவாரசியமாக பேசுகிறார் என்று நேர்மறையாக எடுத்துக் கொள்ளலாம் அதே நேரத்தில் ஒருவர் இவ்வாறாக பேசுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஜாடையாக பேசுகிறார் என்று எதிர்மறையாக குறிப்பிடலாம்.
சுவாரசியமாக அல்லது ஜாடையாக போன்ற தமிழ் அர்த்தங்களில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
His speech is always allusive.
அவரது பேச்சு எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும். அல்லது அவரது பேச்சு எப்போதும் ஜாடையாக இருக்கும்.
Practice it
சுவாரசியமாக அல்லது ஜாடையாக அப்படிங்கற இடத்துல இந்த ALLUSIVE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக