Know the word EMPATHY...

Word of the day is EMPATHY...
Pronunciation
/ˈem.pə.θi/

Function
The word EMPATHY is a noun.

Meaning
The word EMPATHY refers to the ability to understand and experience someone else's suffering என்று சொல்லலாம் அதாவது  மற்றவரின் துன்பத்தை புரிந்துகொண்டு அதனை அனுபவிக்கும் திறனை குறிக்கிறது என்று அர்த்தம்.

அதாவது ஒருவர் கஷ்டப்படும் பொழுது  அவரது அந்த கஷ்டத்தை புரிந்து கொண்டு அந்தக் கஷ்டத்தை தன்னுடைய கஷ்டமாக நினைத்து அவருடன் உணர்வில் ஒன்றிப்பது என்று சொல்லலாம் மேலும் அவருடனேயிருந்து அவரது கஷ்டத்தில் பங்கெடுத்து அவரது கஷ்டத்தை தணிக்க முயற்சி செய்யும்பொழுது அந்த இடத்தில் இந்த EMPATHY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக நண்பரொருவர் அவரது நெருக்கமான உறவினர் ஒருவரை இழந்து சோகத்தில் இருக்கும் பொழுது அந்த சோகத்தை தன்னுடைய சோகமாக நினைத்து, அவருடனேயிருந்து, அவரது சோகத்தில் பங்கெடுத்து அவரது சோகத்தை தணிக்க முயற்சி செய்யும்பொழுது இந்த EMPATHY என்ற இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

இவ்வாறாக தமிழில் இந்த EMPATHY என்ற இந்த வார்த்தையை மற்றவரின் உளமறிதல் அல்லது பச்சாதாபம் என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம்

In a sentence
The best teachers surely have empathy with their students.
சிறந்த ஆசிரியர்கள் நிச்சயமாக தங்கள் மாணவர்களின் உளமறிந்து கொள்வார்கள்.

Unless the nurse has empathy with the patients, she can't treat them well.
செவிலியருக்கு நோயாளிகளிடம் பச்சாதாபம் இல்லையென்றால், அவரால் அவர்களை நன்றாக நடத்த முடியாது.

Practice it
எனவே நண்பர்களே! மற்றவரின் உளமறிதல் அல்லது பச்சாதாபம் அப்படிங்ற இடத்தில இந்த EMPATHY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...