Preposition ACROSS in detail in Tamil

Know the word ACROSS
நண்பர்களே! இந்த பதிவிலே preposition "ACROSS" பற்றி தெளிவாகவும் விரிவாகவும் படிப்போம்.
 
The word "ACROSS" functions as "preposition" and "adverb".

ஐந்து முக்கியமான இடங்களில் "ACROSS" என்ற இந்த Preposition ஆனது ஆங்கிலத்தில் பயன்படுத்தபடுகிறது.

1. குறுக்கே என்ற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

2. ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதியை குறிப்பிட்டு காட்டும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.

3. ஒரு நிகழ்ச்சியானது ஒரே நேரத்தில் பல இடங்களில் நடைபெறும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.

4. "ACROSS  FROM" என்று "American English" இல் பயன்படுத்தப்படுகிறது.

5. ADVERB ஆக செயல்படும்பொழுது 
(இங்கிருந்து அங்கே மற்றும் அங்கிருந்து இங்கே என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது)

மேற்கண்ட அனைத்தையும் எடுத்துக்காட்டு வாக்கியங்களுடன் பார்க்கும் பொழுது நம்மால் இதனை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

முதலாவதாக "குறுக்கே" என்ற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

The bridge is built across the river என்று சொல்லலாம் அதாவது ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

You can divide the room into two by drawing a line across it என்று சொல்லலாம் அதாவது அறையின் குறுக்கே ஒரு கோடு வரைவதன் மூலம் நீங்கள் அதை இரண்டாக பிரிக்கலாம் என்று அர்த்தம்.

இரண்டாவதாக ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதியை குறிப்பிட்டு காட்டும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

We went across the river by boat என்று சொல்லலாம் அதாவது படகு மூலம் நாங்கள் ஆற்றின் மறுபக்கம் சென்றோம் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

Let's go across the road என்று சொல்லலாம் அதாவது நாம் சாலையின் அந்தப் பக்கம் செல்லலாம் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

We had gone across the city very fast என்று சொல்லலாம் அதாவது நாங்கள் நகரத்தின் மறுபக்கத்திற்கு மிக வேகமாக சென்று விட்டோம் என்று அர்த்தம்.

மூன்றாவதாக ஒரு நிகழ்ச்சியானது ஒரே நேரத்தில் பல இடங்களில் நடைபெறும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.

(தமிழில் "முழுவதும்" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது )

எடுத்துக்காட்டு : 1

The shops are closed across the country today என்று சொல்லலாம் அதாவது இன்று நாடு முழுவதும் கடைகள் மூடப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

The movie is released across the country today என்று சொல்லலாம் அதாவது இன்று நாடு முழுவதும் இந்த படம் வெளியிடப்படுகிறது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

We have opened internet center across the city என்று சொல்லலாம் அதாவது நாங்கள் நகரம் முழுவதும் இணைய மையத்தை திறந்து இருக்கிறோம் என்று அர்த்தம்.

நான்காவதாக "ACROSS  FROM" என்று "American English" இல் பயன்படுத்தப்படுகிறது.

இந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் பொழுது தமிழில் "எதிராக" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

My friend stood across from me என்று சொல்லலாம் அதாவது என் நண்பர் எனக்கு எதிராக நின்றார் என்று அர்த்தம்.

அதாவது எதிராக என்று சொல்லும் பொழுது எதிரியாக என்று அர்த்தம் அல்ல மாறாக முன்பாக என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

We were standing across from each other என்று சொல்லலாம் அதாவது நாங்கள் ஒருவருக்கொருவர் எதிரெதிராக நின்று கொண்டிருந்தோம் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

Rani's shop is just across from my shop என்று சொல்லலாம் அதாவது ராணியின் கடையானது எனது கடைக்கு எதிராக இருக்கிறது என்று அர்த்தம்.

ஐந்தாவதாக ADVERB ஆக செயல்படும்பொழுது 
("இங்கிருந்து அங்கே" மற்றும் "அங்கிருந்து இங்கே" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது)

எடுத்துக்காட்டு : 1

My friend came across to meet me this morning என்று சொல்லலாம் அதாவது இன்று காலை என்னை சந்திக்க என் நண்பர் இங்கே வந்தார் என்று அர்த்தம்.

மேற்கண்ட வாக்கியத்தில் ACROSS என்ற PREPOSITION ஆனது "அங்கிருந்த ஒருவர் இங்கு வந்தார்" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

எடுத்துக்காட்டு : 2

As there are lot of people here, I was not able to across என்று சொல்லலாம் அதாவது நிறைய மக்கள் இங்கே இருப்பதால் என்னால் அங்கே வர இயலவில்லை என்று அர்த்தம்.

மேற்கண்ட வாக்கியத்தில் ACROSS என்ற PREPOSITION ஆனது அங்கே என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

"இங்கே"  என்பதற்கு "here" என்ற வார்த்தையும், "அங்கே"என்பதற்கு "across" என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

மேற்கண்ட விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுளின் மூலம் "Preposition ACROSS" பயன்படும்  விதத்தையும்  காரணங்களையும் தெளிவாக கற்றோம்.

கற்ற விஷயங்களை நீங்கள் ஆங்கிலத்தில் பேசும் பொழுது பயன்படுத்துங்கள். தொடர்ந்து ஒவ்வொரு Preposition பற்றியும் பார்ப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...