know the term WHITE ELEPHANT...

Word of the day is WHITE ELEPHANT...
Pronunciation
/ˌwaɪt ˈel.ɪ.fənt/

Function
The word WHITE ELEPHANT is a noun.

Meaning 
It refers to a possession that is a financial burden என்று சொல்லலாம் அதாவது நிதிச்சுமையாக இருக்கும் ஒரு உடைமை என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! பொதுவாக யானை  கருப்பு நிறத்தில் இருக்கும். இந்த வெள்ளை நிற யானையானது யானை வகையில் மிகவும் அரியவகை ஒன்றாகும்.

இந்த அரிய வகை வெள்ளை யானைகள் பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள இந்தோனேசியா, மியான்மார், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் இதனைச் சார்ந்த பிற நாடுகளிலும்  காணப்பட்டன. இவை அரிய வகையாக இருந்ததால் இவற்றை ஒருவர் உடைமையாக பெற்றிருப்பது ஒரு கௌரவமாக, மதிப்புமிக்க ஒன்றாக, பெருமையான ஒன்றாக பார்க்கப்பட்டது எனவே இவை பரிசாகவும் பிறருக்கு வழங்கப்பட்டது. நாளடைவில் இந்த வெள்ளை யானைகளை பராமரிப்பது என்பது ஒரு பெருஞ்சுமையாக மாறிவிட்டது அதே நேரத்தில் அதனை பரிசாக பெற்றவர் பராமரிப்பது என்பது மிகப்பெரிய நிதிச்சுமையாக மாறிவிட்டது.

இவ்வாறாக மதிப்பு மிக்க ஒரு பொருள் பராமரிக்க முடியாத காரணத்தினால் ஒரு பெருஞ்சுமையாக அதனை உடைமையாக பெற்றவருக்கு மாறும் பொழுது அந்த இடத்திலே இந்த வெள்ளை யானை என்ற இந்த TERM ஐ பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் வெள்ளை யானை என்ற அர்த்தத்திலேயே WHITE ELEPHANT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The expensive car that he bought has become a white elephant for him.
அவன் வாங்கிய விலை உயர்ந்த கார் அவனுக்கு வெள்ளை யானையாக மாறிவிட்டது. அதாவது அந்த காரானது பெருஞ்சுமையாக மாறிவிட்டது என்று அர்த்தம்.

He has been spending a lot of money on his business, but it has become a white elephant - he has not made any profit.
அவர் தனது தொழிலுக்கு நிறைய பணம் செலவழித்து வருகிறார், ஆனால் அது வெள்ளை யானையாகிவிட்டது - அவருக்கு எந்த லாபமும் இல்லை.

Practice it
எனவே நண்பர்களே! WHITE ELEPHANT என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...