Know the word STATURE...

Word of the day is STATURE...
Pronunciation
/ˈstætʃ.ər/

Function
The word STATURE is a noun.

Note
இந்த STATURE என்ற இந்த வார்த்தையை இரண்டு விதமாக பயன்படுத்தலாம்

Meaning
முதலாவதாக It refers to a person's or animal's natural height when standing upright என்று சொல்லலாம் அதாவது நிமிர்ந்து நிற்கும் போது ஒரு மனிதரின் அல்லது ஒரு விலங்கின் இயற்கையான உயரம் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! பொதுவாக நாம் ஒரு மனிதரையோ அல்லது ஒரு விலங்கையோ அடையாளம் காட்டும் பொழுது அவர்கள் இயற்கையாக பெற்றிருக்கும் உடல் உயரத்தின் அளவை அடையாளமாக கூறுவோம்.

இவ்வாறாக உடல் அளவை அடையாளமாக கூறும் இடத்தில் இந்த STATURE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே இந்த அர்த்தத்தில் STATURE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் போது தமிழில் உடல் அளவில் என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

In a sentence
He is a man of tall stature with white hair.
அவர் உடல் அளவில் உயரமானவர் மேலும் வெள்ளை முடி கொண்டவர்.

Meaning
இரண்டாவதாக It refers to a respect coming from achievement or development என்று சொல்லலாம் அதாவது சாதனை அல்லது வளர்ச்சியின் மூலமாக வரும் மரியாதை என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு மனிதனையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ அடையாளம் கூறும் பொழுது அந்த மனிதனோ அல்லது அந்த நிறுவனமோ செய்த சாதனைகளையும் அல்லது அடைந்த வளர்ச்சியையும் அடையாளமாக கூறுவதும் உண்டு.

இவ்வாறாக ஒரு மனிதனோ அல்லது ஒரு நிறுவனமோ செய்த சாதனைகளையோ அல்லது அடைந்த வளர்ச்சியையோ அடையாளமாக கூறும் இடத்திலும் இந்த STATURE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே இந்த அர்த்தத்தில் STATURE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் போது தமிழில் பெயர் பெற்றவர் அல்லது புகழ் பெற்றவர் அல்லது பெயர் பெற்றது அல்லது புகழ் பெற்றது என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

In a sentence
Dhoni is a cricketer of great stature.
தோனி ஒரு சிறந்த புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் உடல் அளவில் அல்லது புகழ் பெற்றவர் அல்லது பெயர் பெற்றவர் போன்ற அர்த்தங்களில் இந்த STATURE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...