Know the word APPARENTLY...

Word of the day is APPARENTLY...
Function
The word APPARENTLY is an adverb.

Two meanings
1) used to say what you have read or been told something although you are not certain it is true  அதாவது நீங்க படித்ததின் அடிப்படையிலேயோ அல்லது கேள்விப்பட்டதன் அடிப்படையிலேயோ உண்மை என்று உறுதியாக தெரியாத பொழுதும் அதனை பற்றி பேசும் பொழுது பயன்படுத்தப்படுகிறது என்று அர்த்தம்.

அதாவது எடுத்துக்காட்டாக இன்றைக்கு மழை வரும் என்று நாம் படித்திருப்போம் அல்லது யாராவது நமக்கு சொல்லி இருப்பார்கள் அது உண்மை என்று உறுதியாக தெரியாத போதும் அதனைப் பற்றி பேசும்பொழுது இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
Apparently it is going to rain today.
இன்று மழை பெய்யும் என்று தெரிகிறது.

2) used when the real situation is different from what you thought it was அதாவது நீங்கள் நினைத்ததை விட உண்மையான சூழ்நிலை வேறுபட்டால் என்று அர்த்தம்.

அதாவது ஒருவரை பார்க்கும்போது அவர் நல்லவர் போல தெரியலாம் ஆனால் உண்மை வேறு விதமாக  இருக்கும் அதைப்போல ஒருவரைப் பார்க்கும் பொழுது அவள் இளம் வயதுக்காரர் போல தெரியலாம் ஆனால் உண்மை வேறாக இருக்கும் அப்படிப்பட்ட இடங்களிலும் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
I thought he was dangerous but apparently he is not.
அவர் ஆபத்தானவர் போல் தெரிந்தார் ஆனால் அவர் அப்படி இல்லை.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் *it seems* என்று ஆங்கிலத்தில் பயன்படுத்தும் இடத்தில் *apparently* என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம் தமிழில் *தெரிகிறது* என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

Practice it
தெரிகிறது என்ற அர்த்தத்தில் இந்த APPARENTLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...