Know the word AUDACIOUS...

Word of the day is AUDACIOUS...
Function
The word AUDACIOUS is an adjective.

Meaning
showing a willingness to take surprisingly bold risks அதாவது வியக்கத்தக்க தைரியமான முடிவுகளை எடுக்க விருப்பம் காட்டுதல் என்று அர்த்தம்.

அதாவது ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் அதற்கென்று உரிய பழக்கவழக்கம் என்று ஒன்று உண்டு. அந்த பழக்கவழக்கத்திற்கு மாறாக எல்லோரும் வியக்கத்தக்க ஆச்சரியமான முடிவுகளை எடுத்து செயல்படுத்தும் பொழுது இந்த AUDACIOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் வேலைக்கு சென்று சம்பாதித்து வருவதும் பெண்ணானவள் வீட்டிலிருந்து வீட்டு வேலைகளை செய்வதும் ஒரு வழக்கமான செயல் ஆனால் அந்த செயல் அப்படியே மாறி பெண்ணானவள் வீட்டிற்கு வெளியே சென்று வேலை பார்த்து வருவதும் ஆணானவன் வீட்டு வேலையை செய்வதுமாக ஒரு முடிவு செய்து செயல்படுத்தும் பொழுது அது வழக்கத்திற்கு மாறான எல்லோரும் வியக்கத்தக்க ஒரு செயல் இவ்வாறாக வழக்கத்திற்கு மாறாக எல்லோரும் வியக்கத்தக்க ஆச்சரியமான முடிவை எடுத்து செயல்படுத்தும் பொழுது அதனை ஒரு audacious decision என்று சொல்லலாம்.

எனவே நண்பர்களே audacious என்ற இந்த வார்த்தைக்கு தமிழில் துணிச்சலான என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்த வேண்டும் ஆனால் அதே நேரத்தில் வழக்கத்திற்கு மாறான ஒரு செயலை  செய்யுமிடத்தில் துணிச்சலான என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

In a sentence
His family took an audacious decision that changed their life entirely.
அவனது குடும்பம் ஒரு துணிச்சலான முடிவை எடுத்தது அது அவர்களின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் துணிச்சலான என்ற அர்த்தத்தில் AUDACIOUS என்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...