Know the word INADVERTENTLY...

Word of the day is INADVERTENTLY...
Function
The word INADVERTENTLY is an adverb. 

Meaning
in a way that is not intentional அதாவது வேண்டுமென்றே என்று இல்லாத வகையில் என்று அர்த்தம். 

அதாவது எந்தவித நல்ல நோக்கமோ அல்லது கெட்ட நோக்கமோ இல்லாமல் செய்யப்பட்ட ஒரு செயல் அல்லது நாமே நம்மை அறியாமல் செய்கிற ஒரு செயலை குறிப்பதற்காக இந்த inadvertently என்ற இந்த வார்த்தையானது பயன்படுகிறது.

அதாவது சில நேரங்களில் வீட்டிற்கு வெளியே பைக்கில் போன ஒருவர், சில மணி ஒரு இடத்தில் நேரத்தை செலவழித்து விட்டு திரும்ப வேகமாக வெளியிலிருந்து வீட்டுக்கு போக வேண்டும் என்கிற அவசரத்தில் பைக்கை எடுத்து வேகமாக வீட்டிற்கு வந்து வீட்டில் பைக்கை விட்டதுக்கு அப்புறம்தான் தெரிகிறது அவர் எடுத்து விட்டு வந்தது வேறு ஒருவருடைய பைக் என்று. இந்த நிகழ்ச்சி நடந்ததற்கு காரணம் அந்த பைக் அவரது பைக் மாதிரியே இருந்ததுதானே தவிர வேறு எந்த கெட்ட எண்ணமும் இல்லை என்று சொல்லலாம். 

இவ்வாறாக ஒரு செயல் நம்மை அறியாமலேயே, எந்தவித தவறான எண்ணமோ அல்லது நோக்கமோ இல்லாமல் நடைபெறும் பொழுது இந்த INADVERTENTLY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

தமிழில் தற்செயலாக அல்லது கவனக்குறைவாக என்னுமிடத்தில் இந்த INADVERTENTLY என்ற இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

In a sentence
She inadvertently deleted an important video from the computer. 
அவள் கவனக்குறைவாக ஒரு முக்கியமான வீடியோவை கணினியிலிருந்து நீக்கினாள்.

The shopkeeper gave inadvertently ₹500 instead of ₹100 to me.
கடைக்காரர் என்னிடம் கவனக்குறைவாக 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாயை கொடுத்தார்.

Practice it
தற்செயலாக அல்லது கவனக்குறைவாக அப்படிங்ற இடத்தில் இந்த INADVERTENTLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...