Know the word INSPIRATION...

Word of the day is INSPIRATION...
Pronunciation
/ˌɪn.spəˈreɪ.ʃən/

Function
The word INSPIRATION is a noun.

Note
INSPIRATION என்ற இந்த வார்த்தையை மூன்று அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.

Meaning
முதலாவதாக It refers to someone or something that gives you ideas for doing something என்று சொல்லலாம் அதாவது யாராவதொருவரோ அல்லது ஏதாவதொன்றோ ஒன்று செய்வதற்கு தரும் யோசனை என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! சில நேரங்களில் நாம் ஒருவரோடு பேசும் பொழுதோ அல்லது ஒரு புத்தகத்தை வாசிக்கும் பொழுதோ அல்லது ஏதாவது ஒன்றை பார்க்கும் பொழுதோ அதிலிருந்து நமக்கு திடீரென்று ஏதாவதொரு யோசனை தோன்றும் பொழுது அல்லது ஒரு கருத்து தோன்றும் பொழுது அல்லது ஒரு திட்டம் தோன்றும் பொழுது அல்லது ஒரு எண்ணம் தோன்றும் பொழுது அந்த யோசனையை அல்லது அந்த கருத்தை அல்லது அந்தத் திட்டத்தை அல்லது அந்த எண்ணத்தை இந்த INSPIRATION என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் உத்வேகம் அல்லது அகத்தூண்டுதல் போன்ற அர்த்தங்களில் இந்த INSPIRATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இரண்டாவதாக It refers to someone that people admire and want to be like என்று சொல்லலாம் அதாவது மக்கள் பாராட்டி அவரைப் போலவே வாழ விரும்பும் ஒருவரை என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒருவர் சிறப்பான ஒரு வாழ்க்கை வாழும் பொழுது, பிறருக்கு எடுத்துக்காட்டான ஒரு வாழ்க்கை வாழும் பொழுது அந்த நபரை போலவே நாமும் வாழ்வதற்கு முயற்சி செய்வோம். அப்படித்தானே?

இவ்வாறாக ஒருவர் எடுத்துக்காட்டான ஒரு வாழ்க்கை வாழும் பொழுது மேலும் அந்த நபரைப் போலவே எல்லோரும் வாழ விரும்பும் பொழுது அந்த நபரை இந்த INSPIRATION என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் உத்வேகம் அல்லது அகத்தூண்டுதல் போன்ற அர்த்தங்களில் இந்த INSPIRATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மூன்றாவதாக INSPIRATION என்ற இந்த வார்த்தையானது மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத்துறையில் பயன்படுத்தும் பொழுது It refers to the act of breathing in அதாவது சுவாசிக்கும் செயல் என்று அர்த்தம்.

எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்த பொழுது தமிழில் மூச்சு எடுத்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

In a sentence
He is my inspiration.
அவர்தான் எனது உத்வேகம்.

His life history gave me the inspiration to write this book.
பழங்குடியினருடனான எனது அனுபவம் இந்தப் புத்தகத்தை எழுத எனக்கு உத்வேகம் அளித்தது.

The duration of your inspiration and expiration should be longer than usual.
உனது மூச்சு எடுத்தல் மற்றும் மூச்சு விடுதலுக்கான கால அளவு வழக்கத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.

Practice it
எனவே நண்பர்களே! INSPIRATION என்ற   இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...