Know the word VAINGLORY...

Word of the day is VAINGLORY...
Pronunciation
/veɪnˈɡlɔː.ri/

Function
The word VAINGLORY can be used as verb and noun.

Meaning
inordinate pride in oneself or one's achievements அதாவது ஒருவர் தன்னைப் பற்றியோ அல்லது தனது சாதனைகள் பற்றியோ அளவுக்கு மீறி பெருமை பாராட்டுவது என்று அர்த்தம்.

தமிழில் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் வீண் பெருமை என்ற வார்த்தையை பயன்படுத்தலாம்.

ஒரு மனிதனுக்கு இருக்க கூடாத கேவலமான ஒரு குணம் என்று சொல்லலாம்.

இந்த வார்த்தையானது பணிவு என்ற வார்த்தைக்கு அப்படியே எதிர்ப்பதம் ஆகும்.

இந்த குணம் படைத்தவர்கள் எப்பொழுதும் தன்னைப் பற்றியே தனது நலனைப் பற்றியே தனது சாதனைகளைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு அதிலே சந்தோஷமடைந்து கொண்டு இருப்பார்கள். மேலும் பிறரை மட்டம் தட்டி பேசக் கூடியவர்களாக இருப்பார்கள்.

மேலும் நண்பர்களே! இந்த வீண் பெருமை பேசுவது எந்தவித பயனையும் தராது மாறாக அழிவை மட்டுமே தரும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

In a sentence
She vaingloried herself throughout the meeting.
அவள் கூட்டம் முழுவதும் தன்னைப்பற்றியே வீண் பெருமை பேசினாள்.

His vainglory ruined his promotion.
அவனது வீண்பெருமை அவனது பதவி உயர்வைக் கெடுத்தது.

Practice it
எனவே நண்பர்களே! வீண்பெருமை என்ற இடத்தில் இந்த VAINGLORY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...