Know the word BIZARRE...

Word of the day is BIZARRE...
Function
The word BIZARRE is an adjective.

Meaning
very strange and unusual அதாவது மிகவும் விசித்திரமான மற்றும் வழக்கத்திற்கு மாறான என்று அர்த்தம்.

அதாவது ஒரு சூழ்நிலை வழக்கத்திற்கு மாறான தோற்றத்தைக் கொண்டிருக்கும் பொழுது அல்லது ஒரு மனிதன் வழக்கத்திற்கு மாறான தோற்றத்தைக் கொண்டிருக்கும் பொழுது அல்லது வழக்கத்திற்கு மாறான பழக்கவழக்கத்தை கொண்டிருக்கும் பொழுது இந்த BIZARRE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

For example தான் வேலை செய்து கொண்டிருக்கின்ற ஒரு அலுவலகத்தை பல நாட்களாக ஒரு அமைதிப் பூங்காவாகவே பார்த்து கொண்டிருந்த ஒரு மேலாளர் ஒரு நாள் வெளியூர் செல்ல வேண்டியது இருந்தது என்று வைத்துக் கொள்வோம். அவர் வெளியூர் செல்கிறார் என்பதனால் அலுவலகத்தில் அவருக்கு கீழ் பணிபுரியும் மற்ற ஊழியர்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக அந்த மேலாளர் அந்த அலுவலகத்திற்கு வந்து அந்த சூழ்நிலையை பார்க்கும் பொழுது அந்த சூழ்நிலை அந்த மேலாளருக்கு மிகவும் விசித்திரமானதாகவும் வழக்கத்திற்கு மாறானதாகவும் இருக்கும் அதாவது It is a bizarre situation for him என்று சொல்லலாம்.

அதே போன்று அலுவலகத்திற்கு எப்பொழுதுமே கோட் சூட் அணிந்து வரும் ஒரு மேலாளர் திடீரென்று ஒரு நாள் வேட்டியும் சட்டையும் அணிந்து வரும் பொழுது அதனை பார்க்கின்ற மற்ற ஊழியர்கள் How bizarre it is! என்று சொல்வார்கள் அதாவது இது என்ன மிகவும் விசித்திரமானதாகவும் வழக்கத்திற்கு மாறானதாகவும் இருக்கிறது! என்று.

இவ்வாறாக ஒரு சூழ்நிலையோ அல்லது ஒரு மனிதனோ வழக்கத்திற்கு மாறான தோற்றத்தைக் கொண்டிருக்கும் பொழுது அல்லது வழக்கத்திற்கு மாறானபழக்கவழக்கத்தை கொண்டிருக்கும் இந்த BIZARRE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

தமிழில் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் வினோதமான என்ற வார்த்தையை இந்த BIZARRE என்ற இந்த வார்த்தைக்கு பயன்படுத்தலாம்.

In a sentence
The manager told the workers that their behaviour was bizarre.
மேலாளர் தொழிலாளர்களிடம் அவர்களின் நடத்தை வினோதமாக இருந்தது என்று கூறினார்.

Practice it
எனவே நண்பர்களே! வினோதமான என்கிற தமிழ் அர்த்தத்தில் இந்த BIZARRE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க. 

இதனை வைத்து ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...