Know the word BANISH...

Word of the day is BANISH...
Function
The word BANISH is a verb.

Two Meanings
1) to send someone away, especially from their country or from a group or community அதாவது ஒருவரை அவரது நாட்டிலிருந்து அல்லது ஒரு குழு அல்லது சமூகத்திலிருந்து அனுப்பிவிடுவது என்று அர்த்தம்.

அதாவது சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட ஒருவருக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அந்த நாட்டிலிருந்து அதிகாரபூர்வமாக மற்றொரு நாட்டிற்கு அல்லது மற்றொரு இடத்திற்கு  அனுப்பி வைப்பது என்ற இடத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். மேலும் ஒருவரை அவர் சார்ந்த ஒரு குழுவிலிருந்தோ அல்லது சமூகத்திலிருந்தோ தண்டனை கொடுக்கும் விதமாக ஒதுக்கி வைக்கும் பொழுதும் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

வெளியேற்றுதல், அனுப்பி வைத்தல் அல்லது ஒதுக்கி வைத்தல் போன்ற தமிழ் அர்த்தங்களில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
 He was banished from India by the government.
அவர் இந்தியாவிலிருந்து அரசாங்கத்தால் வெளியேற்றப்பட்டார்.

He is banished from the team for his misbehavior.
அவரது தவறான நடத்தைக்காக அவர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.


2) to get rid of something completely அதாவது  எதையாவதொன்றை முழுமையாக அகற்றுதல் என்று அர்த்தம்.

அதாவது ஒருவரிடம் உள்ள கெட்ட செயல்கள் கெட்ட எண்ணங்கள் தவறான பழக்கவழக்கங்கள் இவற்றை அகற்றுதல் அப்படிங்கற இடத்தில இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதாவது முற்றிலுமாக அகற்றுதல் என்ற தமிழ் அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
It is good to banish all our evil thoughts from our minds.
நம் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அனைத்தையும் முற்றிலுமாக அகற்றுவது நல்லது.

Practice it
வெளியேற்றுதல், அனுப்பி வைத்தல் அல்லது ஒதுக்கி வைத்தல் மேலும் முற்றிலுமாக அகற்றுதல் போன்ற தமிழ் அர்த்தங்களில் இந்த BANISH ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...