Know the word CONSUME...

Word of the day is CONSUME...
Function
The word CONSUME is a verb.

Three Meanings
1) to use fuel, energy, or time, especially in large amounts அதாவது எரிபொருள், ஆற்றல் அல்லது நேரம் ஆகியவற்றை அதிக அளவில் பயன்படுத்துதல் என்று அர்த்தம்

பொதுவாக இயற்கையிலிருந்து பெறப்படுகின்ற வளங்கள் சரியான விகிதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் ஒரு பொது நீதி என்று சொல்லலாம். ஆனால் அவை சில பல காரணங்களால் அளவுக்கு அதிகமாக உபயோகிக்கப்பட வேண்டிய சூழலும் ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில் நாம் தமிழில் உட்கொள்ளுதல் அல்லது தின்னுதல் அல்லது குடித்தல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். அந்த இடத்தில் நாம் இந்த consume என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இதனை வைத்து நாம் சில வாக்கியங்கள் பார்ப்போம் உங்களுக்கு புரியும்.

In a sentence
This car consumes lot of petrol.
இந்த காரானது அதிக பெட்ரோலை உட்கொள்கிறது அல்லது இந்த காரானது பெட்ரோலை அளவுக்கதிகமாக தின்னுகிறது.

This car consumes petrol like water.
இந்த காரானது பெட்ரோலை தண்ணி போல  குடிக்கிறது.

I have to sell this motor because it consumes lot of electricity.
இந்த மோட்டார் அதிக மின்சாரத்தை  உட்கொள்வதால் நான் இதனை விற்க வேண்டும்.

2) to eat or drink, especially a lot of something அதாவது அதிக அளவில் சாப்பிடுதல் அல்லது குடித்தல் என்று அர்த்தம்

பொதுவாக மனிதர்கள் சாப்பிடுவதற்கு அல்லது குடிப்பதற்கு ஒரு அளவு என்று ஒன்றிருக்கிறது. அந்த அளவானது அதனை தாண்டி செல்லும்பொழுது அவன் அளவுக்கு அதிகமாக தின்னுகிறான் அல்லது அளவுக்கு அதிகமாக குடிக்கிறான் என்று சொல்லுவோம் அந்த இடத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இந்த அர்த்தத்தில் சில வாக்கியங்கள் பார்ப்போம்.

He has consumed everything.
அவன் எல்லாவற்றையும் தின்றுவிட்டான் அல்லது அவன் எல்லாவற்றையும் குடித்து விட்டான் என்று அர்த்தம்.

அதாவது நீங்கள் சாப்பிடுவதைப் பற்றி பேசிக் பேசிக் கொண்டிருக்கும் பொழுது He has consumed everything என்று சொன்னீர்கள் என்றால் அவன் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டான் என்று அர்த்தம் அதேபோன்று குடிப்பதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது அந்த இடத்தில் He has consumed everything என்று சொன்னால் அவன் எல்லாவற்றையும் குடித்துவிட்டான் என்று அர்த்தம்.

He has consumed the whole pizza in a minute.
அவன் முழு பிட்சாவையும் ஒரு நிமிடத்தில் தின்றுவிட்டான்.

3) to destroy completely அதாவது முற்றிலுமாக அழித்தல் என்று அர்த்தம்.

அதாவது இந்த அர்த்தமானது நெருப்பினை அடிப்படையாகக் கொண்டு பேசப்படுகிறது.

அதாவது நெருப்பானது ஒரு இடத்தை முற்றிலுமாக அழித்துவிடும் பொழுது இந்த வார்த்தையை பயன்படுத்தி பேசலாம்.

இந்த அர்த்தத்தில் ஒரு வாக்கியம் பார்ப்போம்.

The fire consumed the whole building.
தீயானது கட்டடம் முழுவதையும் எரித்து விட்டது அல்லது தீயானது கட்டிடத்தை முற்றிலுமாக அழித்துவிட்டது.

Practice it
தின்னுதல் அல்லது குடித்தல் அல்லது முற்றிலுமாக அழித்தல் என்ற தமிழ் அர்த்தத்தில் இந்த CONSUME ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...