Know the word DESERVE...

Word of the day is DESERVE...
Function
The word DESERVE is a verb.

Meaning
to be worthy of as a result of past actions அதாவது கடந்த கால செயல்களின் விளைவாக தகுதியாகுதல் என்று அர்த்தத்தம்.

நமது நிகழ் காலமானது நமது கடந்த காலத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது ஒரு பொதுவான கருத்து. அதுபோலவே நாம் நல்ல செயல்கள் பல செய்திருந்தால் நன்மையான அனுகூலங்களை பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதுபோலவே தரமற்ற செயல்களை, கீழ்த்தரமான செயல்களை செய்திருந்தால் அதனுடைய விளைவை அனுபவிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது அதுபோலவே ஏதேனும் ஒரு தவறு செய்திருந்தால் அதுவும் சட்டத்திற்கு புறம்பான மிகப்பெரிய தவறு செய்திருந்தால் அதற்கான தண்டனை பெறுவதற்கு நாம் தகுதி ஆகிறோம். அதுபோலவே நாம் சிறப்பாக உழைத்திருந்தால் அதற்கேற்ற ஊதியம் பெறுவதற்கு நாம் தகுதி ஆகிறோம் இவ்வாறாக ஏதேனும் ஒன்றிற்கு நமது கடந்த காலத்தின் அடிப்படையில் நாம் தகுதி ஆகிறோம். அந்த இடத்தில்தான் தகுதியாதல் என்ற தமிழ் அர்த்தத்தில் deserve என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

In a sentence
He deserves this promotion because he worked assiduously everyday.
இந்த பதவி உயர்வுக்கு அவர் தகுதியானவர் ஏனென்றால் அவர் தினமும் விடாமுயற்சியுடன் பணியாற்றினார்.

They deserve to be punished for their misbehavior.
அவர்களின் தவறான நடத்தைக்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

Practice it
தகுதியாகுதல் என்ற அர்த்தத்தில் இந்த DESERVE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...