Know the word DISTRAUGHT...
Word of the day is DISTRAUGHT...
The word DISTRAUGHT is an adjective.
Meaning
extremely worried, nervous, or upset அதாவது கவலை, பதட்டம் அல்லது வருத்தம் ஆகியவற்றின் உச்சம் என்று அர்த்தம்.
அதாவது வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து அல்லது ஏமாற்றத்தை சந்தித்து அல்லது இழப்பை சந்தித்து தனிமையில் விடப்பட்ட நிலையில் வாழ்க்கையே வெறுத்து நொந்துபோய் இருக்கும் பொழுது இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
மிகவும் மனமுடைந்திருத்தல் அல்லது மிகவும் நொருங்கிபோயிருத்தல் அல்லது மிகவும் நொந்துபோயிருத்தல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.
In a sentence
She is distraught at the loss of her husband.
கணவனை இழந்ததால் அவள் மிகவும் மனமுடைந்து இருக்கிறாள்.
Practice it
மிகவும் மனமுடைந்திருத்தல் அல்லது மிகவும் நொருங்கிபோயிருத்தல் அல்லது மிகவும் நொந்துபோயிருத்தல் என்ற அர்த்தத்தில் இந்த DISTRAUGHT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
கருத்துகள்
கருத்துரையிடுக