Know the word FORSAKE...

Word of the day is FORSAKE...
Function
The word FORSAKE is a verb.

Two Meanings
1) to leave someone for ever, especially when they need you
ஒருவர் உங்களது தேவையில் இருக்கும் பொழுது அவரை என்றென்றும் விட்டுச் செல்லுதல்.

அதாவது நமது நெருங்கிய உறவுகளான நமது பெற்றோர்கள், நமது உடன்பிறப்புக்கள், நமது உறவினர்கள், நமது நண்பர்கள், நம்மோடு இணைந்து பணிபுரியும் சக ஊழியர்கள் நமது உதவியை நாடி இருக்கும்பொழுது அவர்களை கைவிடுதல் என்ற இடத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறாக கைவிடுதல் என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

In a sentence
He forsook his parents in their old age.
அவன் அவனது பெற்றோரை அவர்களது வயதான காலத்தில் கைவிட்டான்.

2) to stop doing or having something அதாவது எதையாவது செய்வதை அல்லது வைத்திருப்பதை நிறுத்துதல்

அதாவது ரொம்ப காலமாக செய்து கொண்டிருந்த ஒரு செயலை அல்லது பழக்கத்தை மேலும் ரொம்ப காலமாக பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு பொருளை பயன்படுத்தாமல் நிறுத்துதல் அல்லது கைவிடுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

இவ்வாறாக நிறுத்துதல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.

In a sentence
He decided to forsake drinking alcohol.
அவர் மது அருந்துவதை கைவிட முடிவு செய்தார்.

Practice it
கைவிடுதல் அல்லது நிறுத்துதல் என்ற தமிழ் அர்த்தத்தில் இந்த FORSAKE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...