Know the word DENOUNCE

Word of the day is DENOUNCE...
Pronunciation
/dɪˈnaʊns/

Function
The word DENOUNCE is a verb.

Meaning
It means to criticize something or someone strongly and publicly என்று சொல்லலாம் அதாவது எதையாவதொன்றையோ அல்லது யாராவதொருவரையோ கடுமையாகவும் பகிரங்கமாகவும் விமர்சித்தல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த DENOUNCE என்ற இந்த வார்த்தையை ஒருவர் மற்றொருவரை ஏதாவது ஒன்றை குறித்தோ அல்லது யாராவது ஒருவரை குறித்தோ கடுமையாகவும் பகிரங்கமாகவும் குறை கூறும் பொழுது அல்லது குற்றம் சாட்டும் பொழுது பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை.

எடுத்துக்காட்டாக ஆளுங்கட்சியானது எதையாவது ஒன்றை குறித்து புதிதாக ஒரு விதிமுறையை அறிவிக்கும் பொழுது அந்த விதிமுறையானது ஏற்றுக் கொள்ளாத வகையில் இருக்கும் பொழுது அதனை எதிர்த்து எதிர்க்கட்சியோ அல்லது பிற கட்சிகளோ அல்லது ஒரு தனி மனிதனோ பொதுவெளியில் பகிரங்கமாகவும் கடுமையாகவும் விமர்சிக்கிற இடத்தில் அல்லது குற்றம் சுமத்துகிற இடத்தில் DENOUNCE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

எனவே தமிழில் கண்டனம் தெரிவித்தல், குற்றம் சாட்டுதல் அல்லது கடுமையாக விமர்சித்தல் போன்ற அர்த்தங்களில் இந்த DENOUNCE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
Usually both the ruling party and the opposition party denounce each other in all matters.
பொதுவாக எல்லா விஷயங்களிலும் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்துக்கொள்வார்கள்.

The workers denounced the new policies which are made by the management.
நிர்வாகத்தின் புதிய கொள்கைகளுக்கு தொழிலாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் கண்டனம் தெரிவித்தல், குற்றம் சாட்டுதல் அல்லது கடுமையாக விமர்சித்தல் போன்ற அர்த்தங்களில் இந்த DENOUNCE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...