Know the word HARBOR or HARBOUR...

Word of the day is HARBOUR...
Function
The word HARBOUR can be used as verb and noun

Meaning as a noun
a sheltered port where ships can take on or discharge cargo அதாவது கப்பல்கள் பாதுகாப்பாக சரக்குகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் இடம் என்று அர்த்தம்.

அதாவது மிகவும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கப்பல்கள் மூலம் பாதுகாப்பாக வணிகம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட இடம் என்று சொல்லலாம் இதைத்தான் நாம் தமிழில் துறைமுகம் என்று அழைக்கிறோம்.

எனவே harbour என்ற இந்த வார்த்தையானது noun ஆக பயன்படுத்தப்படும் பொழுது துறைமுகம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட வேண்டும்.

In a sentence
I spent this evening in the harbour with my friends.
நான் இன்றைய மாலை பொழுதை எனது நண்பர்களுடன் துறைமுகத்தில் கழித்தேன்.

Meaning as a verb
1) to shelter or hide a wanted person அதாவது தேடப்படும் ஒரு நபருக்கு அடைக்கலம் தருதல் அல்லது மறைத்து வைத்தல் என்று அர்த்தம்.

அதாவது ஒரு நபர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு அந்த நபரை காவல்துறை தேடிக்கொண்டிருக்கும் பொழுது அந்த நபரை காப்பாற்றுவதற்காக ஒருவர் தனது வீட்டிலோ அல்லது ஒரு இடத்திலோ மறைத்து வைக்கும் பொழுது மறைத்து வைத்தல் அல்லது அடைக்கலம் கொடுத்தல் என்ற தமிழ் அர்த்தத்தில் harbour என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
He was arrested because he harboured a wanted person.
அவர் தேடப்படும் நபர் ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.

Meaning as a verb
2) keep a thought or feeling, typically a negative one in one's mind for a long time அதாவது ஒருவர் அவரது மனதில் எதிர்மறையான ஒரு எண்ணத்தை அல்லது ஒரு உணர்வை நீண்ட காலமாக வைத்திருத்தல் என்று அர்த்தம்.

அதாவது ஒரு நபர் அவரது கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் ஒருவரை பற்றி ஒரு எதிர்மறையான எண்ணத்தை தனக்குள்ளே நீண்ட காலமாக வைத்திருக்கும் பொழுது கொண்டிருத்தல் என்ற தமிழ் அர்த்தத்தில் harbour என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
He harbours lot of ill feelings about his childhood friends.
அவர் தனது குழந்தை பருவ நண்பர்களைப் பற்றி நிறைய மோசமான உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்.

Practice it
எனவே நண்பர்களே! HARBOUR ங்ற இந்த வார்த்தையை noun ஆக பயன்படுத்தும் பொழுது துறைமுகம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துங்கள் மேலும் verb ஆக பயன்படுத்தும் பொழுது மறைத்து வைத்தல் அல்லது அடைக்கலம் கொடுத்தல் மேலும் எதிர்மறையான எண்ணங்களை அல்லது உணர்வுகளை நீண்டகாலமாக கொண்டிருத்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...