Know the word IMPOSE...

Word of the day is IMPOSE...
Function
The word IMPOSE is a verb.

Meaning
1) to officially force a rule, tax, punishment, etc. to be obeyed or received அதாவது அதிகாரப்பூர்வமாக ஒரு விதி, வரி, தண்டனை போன்றவற்றைக் கடைப்பிடிக்க அல்லது பெற வைப்பது என்று அர்த்தம்.

அதாவது மிகவும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால் ஒருவருக்கு பிடிக்காத ஒன்றை அவரை செய்ய வைப்பது என்று சொல்லலாம்.

பொதுவாக அரசாங்கம் மக்கள் மீது அரசாங்கத்தை அமைதியாக நடத்துவதற்காக, பொருளாதார சிக்கல் இல்லாமல் இருப்பதற்காக வரிகள் விதிப்பதும் சட்டங்கள் இயற்றுவதும் அவசியமானதாகும் ஆனால் அதே நேரத்தில் அந்த வரியோ அல்லது அந்த சட்டமோ அளவுக்கு அதிகமாக ஏற்றுக்கொள்ளாதபடி இருக்கும் பொழுது அந்த சட்டமும் அந்த வரியும் மக்கள் மீது திணிக்கப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இவ்வாறாக ஒருவர் மீது ஒரு சட்டமோ அல்லது வரியை அல்லது தண்டனையோ சரியான காரணமில்லாமல் கடைபிடிக்க வைக்கப்படும்போது imposeங்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

தமிழில் திணித்தல் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
Do not impose on others what you yourself do not desire. (Confucius)
நீங்கள் விரும்பாததை மற்றவர்கள் மீது திணிக்காதீர்கள்.

Practice it
திணித்தல் என்ற தமிழ் அர்த்தத்தில் இந்த IMPOSE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...