Know the word KNOBBLY...
Word of the day is KNOBBLY...
The word KNOBBLY is an adjective.
Meaning
1) having raised areas like lumps on the surface அதாவது மேற்பரப்பில் கட்டிகள் போன்ற உயர்ந்த பகுதிகளை பெற்றிருத்தல் என்று அர்த்தம்.
பொதுவாக ஒரு பொருளாக இருந்தாலும் சரி அல்லது ஒரு இடமாக இருந்தாலும் சரி அல்லது ஒரு உயிரினமாக இருந்தாலும் சரி ஒவ்வொன்றிற்கும் அதற்கென்று ஒரு உருவம் என்று ஒன்று உள்ளது.
அவ்வாறாக ஒரு பொருளோ அல்லது ஒரு இடமோ அல்லது ஒரு உயிரினமோ ஒழுங்கற்ற உருவத்தை பெற்றிருக்கும் பொழுது அதிலும் சிறந்த விதமாக இங்குமங்குமாக வீங்கி கொண்டிருந்தால் இந்த knobbly என்ற இந்த adjective ஐ பயன்படுத்தி அதனை விவரிக்கலாம்.
காய்கறிகளில் உருளைக்கிழங்கானது அனேக நேரங்களில் இவ்வாறாக ஒழுங்கற்ற உருவத்தை பெற்றிருக்கும் அதனை knobbly potatoes என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
சமதளமாக இருக்க வேண்டிய ஒரு சாலையானது இங்கும் அங்குமாக மேடாக இருந்தால் அதனை நாம் Knobbly road என்று வரையருக்கலாம்.
அதைப்போலவே சமதளமாக இருக்க வேண்டிய ஒரு விளையாட்டு மைதானம் இங்குமங்குமாக மேடு மேடாக இருந்தால் அதனை knobbly field என்று சொல்லலாம்.
In a sentence
Players found it difficult to play because of the knobbly field.
சமதளமற்ற மைதானத்தால் வீரர்கள் விளையாட சிரமப்பட்டனர்.
Practice it
இவ்வாறாக ஒரு பொருளோ அல்லது ஒரு இடமோ அல்லது ஒரு உயிரினமோ ஒழுங்கற்ற உருவத்தை பெற்றிருக்கும் பொழுது அதிலும் சிறந்த விதமாக இங்குமங்குமாக வீங்கி கொண்டிருந்தால் அந்த இடத்தில் இந்த KNOBBLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக