Know the word LAVISH...

Word of the day is LAVISH...
Function
The word LAVISH is an adjective.

Meaning
1) spending, giving, or using more than is necessary or reasonable அதாவது தேவையானதை விட அல்லது நியாயமானதை விட அதிகமாக செலவு செய்தல், கொடுத்தல் அல்லது பயன்படுத்துதல் என்று அர்த்தம்.

பொதுவாக ஒரு கருத்து சொல்லுவாங்க அதாவது 50 ரூபாய் கைகடிகாரமாக இருந்தாலும் சரி 50000 ரூபாய் கைக்கடிகாரமாக இருந்தாலும் சரி ஒரே நேரத்தை தான் காட்டும் என்று.

அதாவது இதனுடைய அர்த்தம் என்னவென்றால் ஒருவருடைய செலவு என்பது அவருடைய வருவாய்க்கு உள்ளுக்குள்ளதான் இருக்க வேண்டும் அப்படிங்கறதுதான்.

ஒருவர் ஒருவருடைய சம்பாத்தியத்தை விட அதிகமாக செலவு செய்தாலோ அல்லது அவரை சார்ந்தவர்களுக்கு ஏதேனும் பொருட்கள் வாங்கி கொடுத்தாலோ அல்லது அவரே அவரது சம்பாத்தியத்தை விட அதிக செலவு செய்து ஒரு பொருளை வாங்கி பயன்படுத்தினாலோ அது தேவையற்றதாக அல்லது நியாயமற்றதாக கருதப்படும்.

அந்த இடத்தில்தான் ஆடம்பரம் என்ற தமிழ் அர்த்தத்தில் LAVISH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

In a sentence
He gave a lavish gift to his lady love.
அவர் தனது காதலிக்கு ஆடம்பரமான பரிசை வழங்கினார்.

Practice it
ஆடம்பரம் என்ற தமிழ் அர்த்தத்தில் இந்த LAVISH ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க...

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...