Know the word LUSTER...

Word of the day is LUSTER...
Function
The word LUSTER is a noun.

Two Meanings
முதலாவதாக
1) the brightness that a shiny surface has அதாவது ஒரு பளபளப்பான மேற்பரப்பு கொண்டிருக்கும் பிரகாசம் என்று அர்த்தம்.

அதாவது ஒரு பொருளின் மீது ஒளியானது படும் பொழுது அந்த பொருளானது அந்த ஒளியை பிரதிபலிக்க உகந்ததாக இருக்கும் பொழுது அந்த பொருளை பளபளக்கிறது என்று சொல்லுவோம்.

பொதுவாக ஒரு பொருளானது புதிதாக இருக்கும்பொழுது அது ஒளியை பிரதிபலித்து பளபளப்பாக இருக்கும் மேலும் எல்லோரையும் கவரக் கூடியதாகவும் இருக்கும்.

எனவே நண்பர்களே! மிகவும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால் தமிழில் பளபளப்பு என்று சொல்லும் இடத்தில் இந்த luster என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
He polished the wooden chair to restore its luster.
மர நாற்காலியின் பளபளப்பை மீட்டெடுக்க அவர் அதை மெருகூட்டினார்.

இரண்டாவதாக
2) a very special, attractive quality that people admire அதாவது மக்கள் போற்றும் ஒரு சிறப்பான, கவர்ச்சிகரமான தரம் என்று அர்த்தம்.

அதாவது ஒரு விஷயம் ஒரு மனிதனின் ஆளுமைக்கோ அல்லது ஒரு பொருளுக்கோ அல்லது ஒரு இடத்திற்கோ அதனுடைய தரத்தை உயர்த்துவதாக அல்லது அதனுடைய சிறப்பை உயர்த்துவதாக அமையும் பொழுது இந்த luster என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் போது நாம் தமிழில் பொலிவு என்ற வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
His English language adds luster to his personality.
அவரது ஆங்கில மொழி அவரது ஆளுமைக்கு பொலிவை சேர்க்கிறது.

Metro train adds luster to Chennai.
மெட்ரோ ரயில் சென்னைக்கு பொலிவை சேர்க்கிறது.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் பளபளப்பு அல்லது பொலிவு அப்படிங்ற இடத்துல இந்த LUSTER ங்ற வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...