Know the word MORSEL...
Word of the day is MORSEL...
The word MORSEL is a noun.
Meaning
a small piece of or amount of food or anything அதாவது ஒரு சிறிய துண்டு உணவு அல்லது ஒரு சிறிய அளவு உணவு அல்லது ஒரு சிறிய அளவில் ஏதாவது என்று அர்த்தம்.
அதாவது ஆரம்ப காலகட்டத்தில் இந்த morsel என்ற இந்த வார்த்தையானது பெரும்பாலும் ஒரு சிறிய துண்டு அல்லது ஒரு சிறிய அளவு உணவை குறிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது ஆனால் தற்காலத்தில் இந்த morsel என்ற இந்த வார்த்தையானது உணவை குறிப்பதற்காக மட்டுமல்லாமல் சிறிய அளவில் ஏதாவது ஒன்றை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
morsel என்ற இந்த வார்த்தையானது தனியாக பயன்படுத்தப்படும் பொழுது நேரடியாகவே சிறிய அளவு உணவை குறிக்கிறது.
எடுத்துக்காட்டாக
The hostel boys ate every last morsel on their plate.
விடுதி மாணவர்கள் தட்டில் இருந்த ஒவ்வொரு சாதத்தையும் சாப்பிட்டார்கள்.
அதாவது விடுதி மாணவர்கள் ஒரு பொட்டு சோறு கூட விடாமல் சாப்பிட்டார்கள் அல்லது ஒரு சிறிய துண்டு அல்லது சிறிய அளவு சோறு கூட விடாமல் சாப்பிட்டார்கள் என்று அர்த்தம்.
ஆனால் அதேநேரத்தில் morsel என்ற இந்த வார்த்தையானது உணவைத் தவிர மற்ற விஷயங்களைப் பற்றி பேசப்படும் பொழுது a morsel of good news, a morsel of secret, a morsel of common sense, a morsel of knowledge, என்று பயன்படுத்தப்பட வேண்டும்
எடுத்துக்காட்டாக
He does not have even a morsel of common sense.
அவருக்கு ஒரு துளி கூட பொது அறிவு இல்லை.
Practice it
ஒரு சிறிய துண்டு உணவு அல்லது ஒரு சிறிய அளவு உணவு அல்லது ஒரு சிறிய அளவில் ஏதாவது என்ற அர்த்தத்தில் இந்த MORSEL ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக