Know the word RAD...

Word of the day is RAD...
Function
The word RAD is an adjective.

Meaning
1) extremely exciting or good அதாவது ரொம்ப உற்சாகமான அல்லது ரொம்ப அருமையான என்று அர்த்தம்.

அதாவது உங்களுக்கு கிடைத்த ஒரு அனுபவம் மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சியையோ அல்லது உற்சாகத்தையோ தரும்பொழுது அந்த அனுபவத்தை ரொம்ப அருமையான ஒரு அனுபவம் அல்லது ரொம்ப உற்சாகமாக இருந்தது என்று சொல்லுவோம் அந்த இடத்துல இந்த RAD ங்ற வார்த்தையை பயன்படுத்தலாம்.

ஒரு அருமையான உல்லாசப்பயணத்தை நண்பர்களோடு அல்லது குடும்பத்தோடு அனுபவித்து விட்டு திரும்பி வரும்பொழுது அந்த பயணத்தின் முடிவில் ரொம்ப அருமையா இருந்துச்சு என்று நீங்கள் உணர்ந்தால் அந்த உல்லாச பயணத்தை That was a rad picnic என்று சொல்லலாம்.

நிமிடத்திற்கு நிமிடம் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்திய ஒரு படத்தை பார்த்து விட்டு வரும் பொழுது அந்தப்படத்தை That was a rad movie என்று சொல்லலாம்.

கடைசி நிமிடம் வரை முடிவு தெரியாமல் ஆர்வத்தோடு பார்த்து விட்டு வந்த ஒரு போட்டியை (cricket match, football match etc) பற்றி பேசும்பொழுது That was a rad match என்று சொல்லலாம்.

Practice it
எனவே நண்பர்களே உங்களுக்கு கிடைத்த ஒரு அனுபவம் மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சியையோ அல்லது உற்சாகத்தையோ தரும்பொழுது அந்த அனுபவத்தை விவரிக்க இந்த RAD ங்ற வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...