Know the word REGURGITATE...

Word of the day is REGURGITATE...
Function
The word REGURGITATE is a verb.

Two Meanings
1) to bring swallowed food up again to the mouth அதாவது விழுங்கிய உணவை மீண்டும் வாய்க்கு கொண்டு வருதல் என்று அர்த்தம்.

பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு மனிதன் தான் விழுங்கிய உணவை மீண்டும் வாய்க்கு கொண்டு வருவது என்பது எல்லோரையும் முகம் சுளிக்க வைக்கும் ஒரு செயலாகும் ஆனால் அதே நேரத்தில் விலங்குகள் மற்றும் பறவைகள் பார்வையில் இந்த செயல் மிகவும் ஒரு முக்கியமான செயலாகும் ஏனெனில் இந்த வகையில்தான் சில விலங்குகள் அசை போடுகின்றன மேலும் பல பறவைகள் தங்களுடைய குஞ்சுகளுக்கு உணவு வழங்குகின்றன.

எனவே நண்பர்களே! இந்த அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது REGURGITATE என்ற இந்த வார்த்தையை தொடர்ந்து FOOD என்ற வார்த்தை வர வேண்டும். எனவே தமிழில் சொல்லும் பொழுது விழுங்கிய உணவை மீண்டும் வாய்க்கு கொண்டு வருதல் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

In a sentence
Many birds regurgitate food to feed their small ones.
பல பறவைகள் தங்கள் சிறிய பறவைகளுக்கு உணவளிப்பதற்காக விழுங்கிய உணவை மீண்டும் வாய்க்கு கொண்டு வருகின்றன.

Second Meaning
2) to repeat information without analyzing or comprehending it அதாவது தகவலை பகுப்பாய்வு செய்யாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் திரும்பச் சொல்வது என்று அர்த்தம்.

சில பேர் இருப்பாங்க யாராவது எதையாவது எழுதி கொடுத்து அதனை அப்படியே ஒரு பொது இடத்துல வாசிங்க அப்படின்னு சொன்னா அதனை அப்படியே வாசிப்பாங்க அதுல என்ன எழுதி இருக்கிறது, இதனை பொது இடத்தில் வாசிக்கலாமா என்று கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாங்க ஒருவர் அப்படி செய்யும் பொழுது இந்த REGURGITATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மேலும் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்கள் தங்களது பாடங்களை புரிந்து கொள்ளாமல் அப்படியே மனப்பாடம் செய்து அதனை தேர்வில் எழுதி வைக்கும் பொழுது இந்த REGURGITATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இந்த அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தும்பொழுது அப்படியே சொல்லுதல், அப்படியே எழுதுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

In a sentence
1) Many students regurgitate what they studied in the exam.
பல மாணவர்கள் பரீட்சையில் படித்ததை அப்படியே எழுதுகிறார்கள்.

2) He just regurgitates what he was told.
அவருக்கு சொல்லப்பட்டதை அவர் அப்படியே சொல்கிறார்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் விழுங்கிய உணவை மீண்டும் வாய்க்கு கொண்டு வருதல் மற்றும் அப்படியே சொல்லுதல், அப்படியே எழுதுதல் போன்ற அர்த்தங்களில் REGURGITATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...