Know the word RESENTMENT...

Word of the day is RESENTMENT...
Function
The word RESENTMENT is a noun

Meaning
1) a feeling of anger because you have been forced to accept something that you do not like அதாவது நீங்கள் விரும்பாத ஒன்றை ஏற்றுக்கொள்ள நீங்கள் கட்டாயப்படுத்தபடும் பொழுது ஏற்படும் கோபம் என்று அர்த்தம்.

பொதுவாக நமக்குப் பிடிக்காத ஒரு விஷயம் நமது கண்ணெதிரே நடைபெறும் பொழுது ஒரு மனிதனாக இருந்தால் கண்டிப்பாக கோபம் என்று ஒன்று வரும் ஆனால் அதனை விட்டு மிகவும் எளிதாக வெளியே வரவும் முடியும்.

resentment என்ற இந்த வார்த்தையானது கோபத்தை குறிக்கிறது ஆனால் அதே நேரத்தில் உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை செய்யும்படி உங்கள் மீது திணிக்கப்படும் பொழுது ஏற்படுகின்ற அந்தக் கோபத்தை குறிக்கிறது.

மேலும் resentment என்ற இந்த வகை கோபமானது பல வருடங்களாக ஒரு மனிதனுக்குள் நீடித்துக் கொண்டிருக்கும் ஒரு வகை கோபத்தை குறிக்கிறது.

இந்த resentment என்ற இந்த வகையான கோபமானது ஆழமாக வேரூன்றியிருக்கும் மரத்தைப் போன்றது எளிதில் பிடுங்கி எறிந்து விட முடியாது ஒரு சாதாரண misunderstanding கூட ஒரு மிகப்பெரிய பல நாள் resentment போன்ற கோபத்திற்கு ஒருவரை தள்ளிவிடலாம்.

மறத்தல் மன்னித்தல் என்ற செயல்பாடு மட்டுமே இந்த வகை கோபத்தை மாற்ற முடியும்.

தமிழில் கடுங்கோபம் என்கிற அர்த்தத்தில் RESENTMENT என்ற இந்த வார்த்தையை பயன் படுத்தலாம்.

In a sentence
I am in deep resentment because of what happened to me.
எனக்கு நடந்த சம்பவத்தால் நான் கடுங்கோபத்தில் இருக்கிறேன்.

He harbours a deep resentment against his childhood friends.
அவர் தனது சிறுவயது நண்பர்கள் மீது கடுங்கோபம் கொண்டுள்ளார்.

Practice it
எனவே நண்பர்களே! கடுங்கோபம் என்கிற அர்த்தத்தில் RESENTMENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...