Know the word STRIDE...

Word of the day is STRIDE...
Function
The word STRIDE can be used as verb and noun

Meaning
1) a decisive long step அதாவது நன்கு திட்டமிட்டு எடுத்து வைக்கப்படுகிற ஒரு நீளமான அடி என்று அர்த்தம்.

அதாவது STRIDE என்ற இந்த வார்த்தையானது சாதாரணமாக ஒருவர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தை விரைவாக அடைவதற்காக பெரிய பெரிய அடிகளை எடுத்து வைத்து அந்த இடத்தை அடைதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

மேலும் ஒருவர் தனது வாழ்கையில் முன்னேறுவதற்காக, படிப்பில் முன்னேறுவதற்காக, பொருளாதாரத்தில் முன்னேறுவதற்காக அல்லது அவர் செய்து கொண்டிருக்கின்ற ஒரு வேலையில் முன்னேறுவதற்காக  திட்டமிட்டு எடுத்து வைக்கிற ஒரு தீர்கமான மிகப்பெரிய முடிவு (long step) என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தலாம். 

அதாவது தமிழில் அகலக்கால் எடுத்து வைத்தல் என்று சொல்லுவோம் ஆனால் அகலக்கால் எடுத்து வைத்தல் என்பதை நெகட்டிவ் அர்த்தத்தில்தான் பயன்படுத்துவோம் ஆனால் இங்கே இந்த இடத்துல அந்த அகலக்கால் எடுத்து வைத்து பாசிட்டிவாக அமைந்தால் என்ன ஆகுமோ அந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட வேண்டும்.

In a sentence
I only need few strides to reach my house from the school.
பள்ளியிலிருந்து எனது வீட்டை அடைய சில பெரிய அடிகள் தான் எனக்கு தேவை.

He planned few strides to reach the goal.
அவர் இலக்கை அடைய சில பெரிய முடிவுகளை  திட்டமிட்டார்.

He strode several miles to meet her.
அவன் அவளைச் சந்திக்க பல மைல்கள் பெரிய பெரிய அடிகள் வைத்து நடந்தான்.

Practice it
பெரிய அடிகள் வைத்து நடத்தல் அல்லது தீர்க்கமான பெரிய முடிவுகள் வைத்து முன்னேறுதல் அப்டிங்ற அர்த்தத்தில் இந்த STRIDE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...